tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

சென்னை, ஜன.31

 காந்தி கொடியவன் கோட்சேவால் சுடப்பட்டு இறந்தவுடன், இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெரியடப்பட வேண்டும் என்று கூறியவர் பெரியார் என ஆளுநருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார். 

 

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு வருமாறு: 

தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான இடங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். கிண்டியில் 27 ஜனவரி 1956 அன்று ராஜ ரத்தினம் நாதஸ்வரம் வாசிக்க, சுப்புலக்ஷ்மி ரகுபதி ராகவ பஜனை செய்ய, அப்போதைய மதராஸ் முதல்வர் ராஜகோபாலாச்சாரி காந்தி நினைவகம் திறக்கப்பட்டது. அதுவே பின் நாளில் மக்களால் காந்தி மண்டபம் என அழைக்கப்பட்டு பெயரானது.

 

 

ஆளுநர், ஆட்சியாளர்கள் தான் சொல்வதை கேட்டே ஆக வேண்டும் என்னும் மனநிலையில் இருந்து விலக வேண்டும். காந்தியடிகளின் நினைவு தினம், ஒவ்வொரு வருடமும் எழும்பூர் ர் அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அனுஷ்டிக்கப் படுகிறது. இதே ஆளுநர் கடந்த 2023 வருடம் முதல்வருடன் காந்தியடிகளின் நினைவு தினத்தில் மரியாதை செலுத்தினார்.

 

 

காந்தியின் இறுதிக் காலத்தில் அவரது தனிச் செயலாளராக இருந்த தியாரே லால் நய்யார் தாம் எழுதிய ‘மகாத்மா காந்தி கடைசிக் கட்டம்‘ என்ற நூலில் வெள்ளிக் கிழமை அன்று நல்ல செய்தி வரும். எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கெனவே கூறியிருந்தார்கள். அது மட்டுமல்ல, காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்து கொண்டாடினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்த சித்தாந்தம் உடையவர்கள் தேசப் பிதாவின் இறப்பைக் கூட கொண்டாடினார்கள் என்று ஆளுநர் சொல்லுவாரா?

 

”தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம்” என ஊடகங்களிடம் பகிரங்கமாக சொன்னேரே புஜா சகுன் பாண்டே, அவர் எந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர் என்று ஆளுநர் சொல்லுவாரா? 

தந்தை பெரியார், காந்தி கொடியவன் கோட்சேவால் சுடப்பட்டு இறந்தவுடன், இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெரியடப்படவேண்டும் என்று கூறியதை ஆளுநருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்” 

இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறிஉள்ளார்.

ராசி பலன்

பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். பணிகளில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயண முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சிலரின் உதவியின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் நிதானத்துடன்... மேலும் படிக்க

வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் முன் கோபம் இன்றி பொறுமையை கையாளவும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் மூலம் தாமதம் ஏற்படும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச்... மேலும் படிக்க

வியாபாரம் நிமித்தமான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உயரதிகாரிகளிடம் அனுசரித்துச்... மேலும் படிக்க

வியாபார பணிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். காப்பீடு பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

இழுபறியான வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள்... மேலும் படிக்க

முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேர்ப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். ஆராய்ச்சிக் கல்விகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் சாதகமாகும். குழந்தைகள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள்... மேலும் படிக்க

சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் புது விதமான... மேலும் படிக்க

வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எந்த ஒரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.... மேலும் படிக்க

கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். சகோதரர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதை உறுத்திய சில... மேலும் படிக்க

எதிர்பாராத சிலரின் உதவிகளால் தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படவும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள்... மேலும் படிக்க

பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றங்கள் உருவாகும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளை பார்க்கவேண்டிய சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு... மேலும் படிக்க