tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஏப். 28-

இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் மின்னணு சந்தையில் 8% வளர்ச்சிக்கு இலக்கு வைத்துள்ளது. கேமரா, டிஸ்ப்ளே, சார்ஜர்,அடாப்டர், லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்ட மின்னணு பொருள்களின் விநியோக சங்கிலி, இந்தியாவை நோக்கி மாறிக் கொண்டிருக்கிறது. அதே வேளை ஐடி துறையில் இந்தியா மிகப்பெரிய முன்னணியில் உள்ளது. எனவே டிஜிட்டல் பொருளாதாரத்தில் 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும் என "நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மீண்டெழும் பொருளாதார கட்டுமானம்" என்ற தலைப்பில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பேசினார்.

அவர் பேசியதாவது:-

இந்த சொற்பொழிவுக்கான தலைப்பாக 'மீண்டெழுதல்' என்று வழங்கப்பட்டுள்ளது. தானியங்கி தொழில்நுட்பம் மூலமான (Automation) பணியிழப்புகள், புவி மைய அதிகார போட்டி, வெப்பமயமாதல் போன்ற பல்வேறு காரணிகள், ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் உலக நாடுகளுக்கு இடையிலும் சமத்துவமின்மையை வளர்த்து வருகிறது என்ற காரணிகளில் இருந்து தான் இதனை நாம் பார்க்கிறோம். உலகம் தொழில்மயமாதல் நடவடிக்கையில் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது.

தொழில்மயமாதல் 1.0 நீராவி என்ஜின் உள்ளிட்ட பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியது. அதேபோல் தொழில்மயமாதல் 2.0 மின்சாரமயமாதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகளை கண்டது. தொழில் மயமாதல் 3.0 கணினி மையம் உள்ளிட்ட புரட்சிகரமான மாற்றங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தொழில் மயமாதல் 4.0 என்பது, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ரோபோடிக்ஸ், இன்டர்நெட் ஆப் திங்ஸ், ஆகுமெண்டல் ரியாலிட்டி என புதிய புரட்சிகளை உள்ளடக்கியதாக அபார வளர்ச்சி பெற்று வருகிறது.

அது தவிர நிகழ் நேர கண்காணிப்பு, தகவல் திரட்டல், தரவுகள் மூலமாக திட்டமிடல், ஜாட்பாட் மூலமாக புரட்சிகரமான வாடிக்கையாளர் சேவை என புதிய திசையில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் மயமான மாறுதல்களை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதன் மூலம், தொடர்பு சங்கிலிகளை அதிகரிக்கலாம். தொழில் நுட்ப புத்தாக்கங்கள் மூலம், பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் ஆய்வு வளர்ச்சியை சாத்தியமாக்கலாம். உருவாகும் சைபர் பாதுகாப்பு சவால்களை சட்ட ரீதியான அமைப்புகள் மூலம் சரிபடுத்தி கொள்ளலாம்.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 2019 20ம் ஆண்டுகளில் ரு. 13.6 லட்சம் கோடியாக இருந்தது. 2021- 22 ஆம் ஆண்டுகளில் அது ரூ. 18. 2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உலக மின்னணு உற்பத்தி பங்களிப்பில் சீனா 60 விழுக்காடும் இந்தியா மூன்று புள்ளி 3.30 விழுக்காடும் ஜப்பான், கொரியா, அமெரிக்கா ஆகியவை இணைந்து 20 விழுக்காடு பங்களிப்பையும் கொண்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பு 40 சதவீதத்தில் வந்து 20% ஆக குறைந்துள்ளது.

தனிநபர் வருவாய்

அவரைத் தொடர்ந்து, சென்னை பொருளியல் பள்ளியின் தலைவரும் முன்னாள் ரிசர்வ் பேங்க் ஆளுநருமான சி. ரங்கநாதன் தலைமையுறையில் பேசியதாவது:-

தொழில்நுட்ப வளர்ச்சியில் வேலை இன்மை அதிகரிக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. தொழில்நுட்பம் வளரும் போது வேலையின்மை ஏற்படும் என்பது இயல்பான ஒன்றுதான். எடுத்துக்காட்டாக இந்திய ரிசர்வ் பேங்கில் மூன்றில் ஒரு பகுதி பணியாளர்கள், முன்பு பணத்தை எண்ணும் பணியில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். ஆனால் இப்பொழுது பணம் என்னும் எந்திரங்கள் வந்த பிறகு மூன்றில் ஒரு பகுதியினருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. இந்த மாற்றம் இயல்பான ஒன்றுதான். இதனை தவிர்க்க முடியாது. வளர்ச்சி இல்லாமல் வேலை வாய்ப்பை உருவாக்குவது எப்படி சரியானது இல்லையோ, அதேபோல் வளர்ச்சிக்காக வேலையை பறித்துக் கொள்வதும் சரியானது இல்லை என்பது தான் உண்மை.

இவ்வாறு அவர் பேசினார்.

கிருஷ்ணன் ஐஏஎஸ் பேசும்போது இந்தியா அஞ்சாவது பொருளாதார நாடாக முன்னேறி வருகிறது என்று குறிப்பிட்டார் ஆனால் தனி நபர் வருவாய் மற்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் மிகவும் குறைவாக உள்ளது. தனிநபர் வருவாய் உயராமல் பொருளாதார வளர்ச்சி என்பது சரியான வளர்ச்சி அல்ல என்றும் ரங்கநாதன் குறிப்பிட்டார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

நிகழ்ச்சியில் சிறந்த மாணவிகள் நான்கு பேருக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது.மேலும் நிகழ்ச்சியில் ஜி.ராமச்சந்திரன் குடும்பத்தைச் சேர்ந்த ஆர். கணபதி, கீதா கங்காதரன் மற்றும் ஸ்ரீபதி, சந்திரமௌலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க