tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 4–

இந்தியாவில் இன்னும் ௨௦ ஆண்டுகள் பா.ஜ., ஆட்சி தான்.. என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார்.

 

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடந்தது. இதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசியதாவது:

சுதந்திர இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு அரசுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆதரவு அளித்து ஆட்சி கட்டிலில் அமர்த்தியுள்ளனர். இதனை நான் சாதாரணமாக கருதவில்லை. ஆனால் சிலர் இந்த விஷயத்தை மக்களின் பார்வையில் இருந்து மறைத்து தவறான விஷயங்களை முன்வைத்து வருகின்றனர். தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம். இன்னும் 20 ஆண்டுகள் எஞ்சியிருக்கின்றன. அதுவரை பாஜ ஆட்சி தான்.

 அடுத்த 5 ஆண்டுகள் என்பது மக்களின் அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும். வறுமைக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறிய பின்னர், அதன் தாக்கம் நமது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்கும்.

மணிப்பூர்

  வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மீண்டும் சாதாரண நிலை திரும்பத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அங்கு வன்முறைச் சம்பவங்கள் படிப்படையாக குறையத் தொடங்கி விட்டன. மணிப்பூரில் அனைத்து தரப்பு மக்களிடமும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளில் அரசுஈடுபட்டுள்ளது.தற்போது கூட வெள்ளம் பாதித்த மணிப்பூர் பகுதிகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளில் மாநில அரசுக்கு மத்திய அரசு தகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

 மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் காங்கிரஸ், தனது ஆட்சிக் காலத்தில் 10 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை அங்கு கொண்டு வந்தது. மணிப்பூரில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் நடந்து கொள்பவர்களை எச்சரிக்கிறோம். மணிப்பூர் விவகாரத்தை அரசியல் ஆக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் மணிப்பூரே உங்களை நிராகரித்து விடும். மணிப்பூரில் மீண்டும் அமைதியை நிறுவ மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இவ்வாறு பிரதமர் பேசினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க