tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்­னை, ஜூன் ௮–

எம்.ஜி.ஆரின் சின்­ன­மான இரட்டை இலையை எதிர்த்து நின்ற ஓ.பன்­னிர்­செ­ல்­வம், அதி­முக தொண்­டர்­க­­ளுக்கு அழைப்பு விட எந்த வித தார்­மீக உரி­மையும் கிடை­யாது. இது தான் பழ­னி­சா­மியின் கருத்து. தொண்­டர்­களின் கருத்­து என்று அதி­முக துணைப் பொதுச் செய­லாளர் கே.பி. முனு­சாமி பதி­லடி கொடுத்­துள்ளார்.

 மக்­க­­ள­வைத் தேர்­த­லுக்கு பின்­னர் அதி­முக வினர் ஒன்­றி­ணை­ய­வேண்டும் என்று சசி­கலா மற்றும் ஓ.பன்­னீர்­செல்வம் அழைப்­பு விடுத்­துள்­ளனர். ஆனால் இதை அதி­முக நிரா­க­ரித்­துள்­ளது. இது தொடர்­பாக அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:

அதி­முக தொண்­டர்கள் ஒருங்­கி­ணை­ய­வேண்டும் என்று அழைப்பு விடுக்க பன்னீர்செல்வத்திற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அ.தி.மு.க., பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது, சோதனைகளின் முக்கிய கருவாக இருந்து, கட்சிக்கு சோதனைகளை கொடுத்தவர்.

பொதுக்குழு கூடியபோது, கட்சி தலைமை அலுவலகத்தை குண்டர்களை வைத்து, அடித்து நொறுக்கி, அங்கிருந்த ஆவணங்களை திருடிச் சென்றவர். அதைத் தொடர்ந்து, கட்சியின் சின்னத்தை முடக்க, நீதிமன்றம் சென்றவர். 

கட்சியை முடக்க வேண்டும் என்பதற்காக, அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தார்.

 நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து, ராமநாதபுரம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளரை, இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்றவர்.

இவருக்கு எந்த வகையில், அ.தி.மு.க., தொண்டர்களை அழைக்க உரிமை உள்ளது? 

மேலும், ஜெயலலிதா பெயரை அவர் குறிப்பிட, எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் ஜெயலலிதாவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மிகக் கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதா மீது உண்மையான பாசம் இருந்தால், அண்ணாமலை பக்கத்தில் உட்கார மனம் வருமா?

இவர் எப்படி அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க அழைக்கலாம்? அண்ணாமலையை நல்லவர் எனச் சொன்னவர் அவர். அப்படிப்பட்டவர் 'ஒன்றிணைய வா' என்று சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லாதவர். இதுபோன்ற அறிக்கைகளை இனிமேல் அவர் கொடுக்கக்கூடாது. இது எங்கள் பொதுச்செயலர் பழனிசாமி, தொண்டர்கள் கருத்து. 

 

ஜெயலலிதா பின்னால் நின்று அதிகாரத்தை சுவைத்தவர் சசிகலா. இன்று இக்கட்சியை காப்பாற்றுவேன்; வாருங்கள் என்கிறார். அந்த அறிக்கை வெளியாகி, 24 மணி நேரமாகி விட்டது. எத்தனை பேர் சென்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த, ஒரு சிலர் முயற்சிக்கின்றனர். அந்த குழப்பத்தைத் தாண்டி, பழனிசாமி அனைவரையும் அரவணைத்து, கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.பன்னீர்செல்வம்

 

ஆதரவாளர்களுக்கு வலை

 

அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் போன்றோரிடம் பேசி, அவர்களை கட்சியில் இணைப்பதற்கான முயற்­சியில் பழ­னி­சாமி இறங்கி உள்­ளார்.இ­தற்­கா­க முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழுவை, பழனிசாமி நியமித்துள்ளார்.

 

  

 அதே சம­யத்தில் சசி­கலா தண்­டிக்­கப்­பட்ட குற்­ற­வாளி என்­பதால் அவர் தலை­மைப்­ப­த­விக்குவ­ரக்­கூ­டாது. தனது தலை­மையின் கீழ் அனை­வரும் இணைய வேண்­டும் என்று அவர்­ அழைப்­பதே தவறு என்­கிறார் அதி­முக முன்னாள் எம்.பி.கே.சி.ப­ழ­னி­சாமி.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க