tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுக்கோட்டை, ஜூலை 21–

கம்யூனிஸ்டுகள் போல மின்கட்டண உயர்வு குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும். நாம் இரண்டும்கெட்டான் கட்சியாக இருக்கக்கூடாது. தமிழக அமைச்சரவையிலும் காங்கிரஸ் பங்கு கேட்கவேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. போர்க்குரல் எழுப்பிஉ ள்ளார்.

புதுக்கோட்டையில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:- 

  நம்முடையை கட்சியை சேர்ந்தவர்.. நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் படுகொலை செய்யப்படுகிறது. அவரது கொலையில் இதுவரை ஒருவரை கூட காவல்துறை கைது செய்யவில்லை. எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் அதை பற்றி நான் பேசியது இல்லை. அதை பற்றி முறையிடுவது இல்லை. அதிகம் மவுனம் காத்து வந்தோம். அது எப்படி முடியும்?

என்கவுன்டர் ஏன்..

 ஒரு தேசிய கட்சி. நாட்டின் எதிர்க்கட்சி. அந்த கட்சியை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதில் ஒருவரை கூட போலீஸ் கைது செய்யவில்லை. அரசை குறை சொல்லியது இல்லை. அதை பற்றி கேட்காமல், அதனை விவரிக்காமல் எப்படி இருக்க முடியும். இப்போது கூலிப்படை கொலைகள் நடப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைப்பற்றிய கருத்தை கண்டிப்பாக சொல்ல வேண்டும். என்கவுண்டரை கண்டிப்பாக கண்டிக்க வேண்டும். காவல்துறை ரவுடிகளை என்கவுண்டர் செய்து கேஸை சரியாக நடத்துகிறார்கள் என்று நினைக்காதீங்க.. கேசை முடிப்பதற்காக தான் என்கவுண்டர் செய்கிறார்கள். இதையெல்லாம் பேசும்போது மின் கட்டணத்தை பற்றியும் நாம் பேசியாக வேண்டும். 

தயக்கம் வேண்டாம்

 விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? நாமும் நம்முடைய கருத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் நம்மை திரும்பி பார்ப்பார்கள். நாம் கூட்டணியை மதிக்கிறோம். திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். திமுகவின் திட்டங்களை மதிக்கிறோம். மகளிர் உரிமை தொகை திட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் நாம் பொதுப்பிரச்சினைகளில் பேச தயக்கம் காட்டுகிறோம். இனி தயக்கம் காட்ட கூடாது. 

இரண்டும்கெட்டான் கட்சி

 இனிமேல் நிச்சயமாக பாஜவுக்கு இறங்கு முகம் தான். காங்கிரசுக்கு ஏறு முகம் தான். அரசியலில் ஆளுங்கட்சி ஒன்று இருக்கிறது. எதிர்க்கட்சி ஒன்று இருக்கிறது. இப்படி இரண்டுபக்கமும் இல்லாமல் இரண்டுங்கெட்டான் கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. 2029க்கு முன்பாக 2026 தேர்தல் இருக்கிறது. தமிழக அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க