tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, அக்.19-
ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட், ‘‘மனுதாரரின மகள்களான இரு பெண் துறவிகளும் தங்களது சொந்த விருப்பத்தில் ஈஷா மையத்தில் தங்கியுள்ளனர். ஈஷா மையம் மீது தவறு இல்லை’’ என்று தீர்ப்பளித்தது.
கோவையை சேர்ந்த காமராஜ் என்பவர், தனது இரு மகள்களை மூளைச்சலவை செய்து கோவை ஈஷா மையத்தில் அடைத்து வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொண்ர்வு மனு தாக்கல் செய்தார். 
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமண்யம், சிவஞானம் கொண்ட பெஞ்ச், செப்.30ல் விசாரித்தது. நீதிபதிகளிடம் காமராஜின் இரு மகள்களும், ‘சொந்த விருப்ப அடிப்படையில் துறவியாக மாறி, ஈஷா ஆசிரமத்தில் தங்கியிருக்கிறோம். ஆசிரமத்தில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இது தவறான வழக்கு’ என்று  விளக்கம் அளித்தனர். ஆனால், ஈஷா மையம் குறித்து சில விமர்சனங்களை தெரிவித்த ஐகோர்ட் பெஞ்ச், ஈஷா மையத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எல்லா வழக்குகளின் விசாரணை நிலவரம் பற்றி அக்.4ம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து 150 போலீசார் மற்றும் பல துறைகளின் அதிகாரிகள் கொண்ட தமிழக அரசு குழு, ஈஷா மையத்துக்கு சென்று விசாரணை நடத்தியது.
ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஈஷா யோகா மையம் அப்பீல் செய்திருந்தது. அதை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா கொண்ட பெஞ்ச் அக்.3ல் விசாரித்தது.
ஈஷா தரப்பில் சீனியர் வக்கீல் முகுல் ரோஹத்கி, தமிழக அரசு தரப்பில் சீனியர் வக்கீல் சித்தார்த் லுத்ரா, மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர்.
வக்கீல்களின் ஆரம்ப வாதங்களை  கேட்டபின், தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகளும், சேம்பருக்கு சென்று, வீடியோ கான்பரன்ஸ் முறையில் இரு பெண் துறவிகளிடம் பேசிவிட்டு கோர்ட் அறைக்கு திரும்பினர். அதன்பின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘ ‘ஈஷா ஆசிரமத்தில் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வசிப்பதாக இரு பெண் துறவிகளும் தெரிவித்தனர்’’ என்று அறிவித்து ‘‘ஈஷா மையம் போன்ற இடத்தில் போலீஸ், ராணுவ சோதனையை அனுமதிக்க முடியாது’’ என்று கண்டித்தார்.
அதன்பின், ‘இரு பெண் துறவிகளும் (42 வயது, 39 வயது), ஈஷா ஆசிரமத்தில் சொந்த விருப்பத்தில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் 24  வயதிலும், இன்னொருவர் 27 வயதிலும் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளனர், ‘ஆசிரமத்தில் எந்த பிரச்னையும் இல்லை. பயணத்தடை எதுவும் கிடையாது. எங்கள் பெற்றோர், பல முறை ஆசிரமத்துக்கு வந்து எங்களை சந்தித்துள்ளனர்’ என்று அவர்கள் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர், சமீபத்தில் 10 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். ஐகோர்ட்  உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த உத்தரவு அடிப்படையில், போலீசார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. ஏற்கனவே நடத்திய விசாரணை குறித்த நிலவர அறிக்கையை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று பெஞ்ச் உத்தரவிட்டது.
உள்நோக்கம்
இந்நிலையில், நேற்று விசாரணை தொடர்ந்தது.
‘‘ஈஷா மையத்தில் நடந்த விசாரணை நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறோம். இரு பெண் துறவிகளும் வெளிநாட்டினரும் சொந்த விருப்பத்தில்தான் அங்கு தங்கியுள்ளனர். ஆனால், வேறு சில விதிமீறல்கள் உள்ளன’’ என்று, நீதிபதிகளிடம் சித்தார்த் லுத்ரா தெரிவித்தார். 
அவரிடம் தலைமை நீதிபதி, ‘‘ ஆட்கொணர்வு மனுவை விசாரித்த ஐகோர்ட், இரு பெண் துறவிகளின் வாக்குமூலம் பதிவு செய்தபின், வழக்கை முடித்திருக்க வேண்டும். மனுவை மீறிய விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டதால்தான் நாங்கள் தலையிட்டோம்.  வேறு புகார்களை இப்போது நாங்கள் விசாரிக்கவில்லை. அவற்றை போலீஸ் விசாரிக்கலாம்’’ என்று குறிப்பிட்டார்.
அதையடுத்து முகுல் ரோஹத்கி,  ‘‘ஈஷா மைய ஆசிரமத்தில் தங்கியுள்ள அனைவரும் தங்களது சொந்த விருப்பத்தில் தங்கியுள்ளனர். யாருக்கும் எந்த நிர்பந்தமும் கிடையாது. இதை, விசாரணை குழுவிடம் அவர்களே தெரிவித்துள்ளனர். சிலரது உள்நோக்கத்தால் சத்குருவுக்கும் ஈஷா மையத்துக்கும் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டு வருகிறது’’ என்று முறையிட்டார். அவரிடம் தலைமை நீதிபதி, ‘‘ஈஷா மையத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளனர். எனவே, ஈஷா மையத்தில் அவர்களே ஒரு உள்விசாரணைக் குழுவை அமைத்து விட்டால், விதிமீறல் அல்லது வீண் அவதுாறு பிரச்னைகளைத் தவிர்க்கலாம்’’ என்று அறிவுறுத்தினார்.
வழக்கு முடிவு
பின்னர், ‘ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தவரின் மகள்களான இரு பெண் துறவிகளும் தங்களது சொந்த விருப்பத்தில் ஈஷா மையத்தில் தங்கியுள்ளனர். ஈஷா மையம் மீது தவறு இல்லை. எனவே, ஆட்கொணர்வு மனு முடித்து வைக்கப்படுகிறது. வேறு புகார்கள் இருந்தால், அவற்றில் போலீஸ் விசாரணை தொடரலாம்’ என்று சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் உத்தரவிட்டது.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க