tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, செப். 25– 

 

தமிழகத்தில் முதல் முறையாக, ஆபரண தங்கம் விலை கிராம், 7,000 ரூபாய்க்கும், சவரன் 56,000 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. 

 

ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை உயர்ந்தது. இந்த சூழலில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள், சமீபத்தில் வைப்பு நிதிக்கான வட்டியை, 0.25 சதவீதம் குறைத்தன. இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். 

 

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வால், நம் நாட்டிலும் அதன் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,980 ரூபாய்க்கும், சவரன் 55,840 ரூபாய்க்கும் விற்பனையானது. 

 

வெள்ளி கிராம், 98 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து முதல் முறையாக, 7,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 56,000 ரூபாயை எட்டியுள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. 

 

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:

 

கொரோனா தொற்று ஊரடங்கின் போது, உலகில் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால், மற்ற முதலீட்டு திட்டங்களை தவிர்த்து, உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்தனர். அதற்கு ஏற்ப, தங்கம் மீதான முதலீடுகள் பெரும் லாபத்தை ஈட்டி தந்தன. 

 

தற்போது, பல நாடுகள் இடையே நிலவும் போர் பதற்றத்தால், முதலீட்டாளர்களுக்கு பங்கு சந்தை உள்ளிட்ட முதலீட்டு திட்டங்களின் மீது நம்பிக்கையில்லை. இதனால், அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையால், தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். 

 

இதனால், உலக சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அவுன்ஸ் தங்கம் விலை, 100 டாலர் உயர்ந்து, 2,630 டாலரை எட்டியுள்ளது. நம் நாட்டில் தங்கம் கிராம் முதல்முறையாக, 7,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு தொடர்ந்து இருக்கும். 

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

 கிராம் ரூ.1,090 உயர்வு

 

இந்தாண்டு ஜன., 1ல் தங்கம் கிராம், 5,910 ரூபாய்க்கும், சவரன் 47,280 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு, 1,090 ரூபாயும்; சவரனுக்கு, 8,720 ரூபாயும் உயர்ந்துள்ளது.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க