tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

வேலூர்,ஜூலை 16

உச்சநீதிமன்றத்தையேகர்நாடக அரசு மதிப்பதில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

காட்பாடி அருகேயுள்ள கிறிஸ்டியான்பேட்டை அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், `முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.பின்பீர் செய்தியாளர்களிடம்அவர் கூறியதாவது:

 காவிரி ஒழுங்காற்றுக்குழு வேண்டுகோளாக அல்லது உத்தரவாகக் கர்நாடக அரசிடம் ஒன்றைத் தெரிவித்தது. `தமிழகத்துக்குத் தரவேண்டிய நீர் நிறைய இருந்தாலும், அவர்களின் அடிப்படை தேவைகளைப் போக்குவதற்காக நாளொன்றுக்கு 1 டி.எம்.சி-யை தரவேண்டும்’ என்று சொன்னார்கள். `தர முடியாது’ என்று அவர்கள் அடம்பிடித்தார்கள். ஆனாலும், நாங்கள் நிலைமைகளை விளக்கிச்சொல்லி, `கர்நாடக அரசு கனிவோடு கவனிக்க வேண்டும்’ என்றோம்.

அதிக நீர் இருப்பு

அதன் பிறகும் கர்நாடக அரசு தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாமல், `8,000 கன அடி நீர் மட்டுமே தருகிறோம்’ என்று சொல்கிறார்கள். `கபினி’யில் இன்று பெருமளவு பெருக்கெடுத்து வந்துகொண்டிருக்கிறது. கே.ஆர்.எஸ் அணையின் உயரம் 124.80 அடி. அதில், தற்போதைய நீர் இருப்பு 105.40 அடி. கபினி அணை 65 அடி உயரம். அதில், 63.46 அடிக்குத் தண்ணீர் இருப்பு இருக்கிறது. இதேபோல, அங்குள்ள மேலும் 2 அணைகளிலும் போதுமான அளவைக் காட்டிலும் அதிகமாகவே நீர் இருப்பு தேக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், மேட்டூர் அணைக்கு இதுவரை 4,047 கன அடிக்குத் தண்ணீர் வந்திருக்கிறது.

 

இது குறித்து, முதலமைச்சர் என்னிடம் பேசினார். இன்றைக்கு நிலைமை, அங்குத் தண்ணீர் அதிகமாக வந்துக்கொண்டிருக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து முதலமைச்சரின் தொலைபேசி அழைப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். 

 

*எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, `காவிரி விவகாரம், தமிழ்நாடு விவசாயிகளைப் பற்றியெல்லாம் தி.மு.க அரசு கவலைப்படுவதில்லை. ஸ்டாலினுக்குக் கூட்டணிதான் முக்கியம்’ என்று விமர்சனம் செய்திருக்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன?

துரைமுருகன்: கூட்டணி என்பது வேறு. அவரவர் பிரச்னைகள் என்பது வேறு. தாயாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும் `வயிறு’ வேறுதானே!. எடப்பாடிக்கு காவிரி விவகாரம் பற்றியெல்லாம் அதிகமாகத் தெரியாது. காவிரி வரலாற்றை ஆரம்பத்தில் இருந்து, அதாவது 1971-ம் ஆண்டில் இருந்து படித்துக்கொண்டு வருகிறேன். எப்போதெல்லாம் அமைச்சராக இருந்தேனோ... அப்போதெல்லாம் நான் இந்தத் துறையைத்தான் எடுத்திருக்கிறேன். நீண்டநெடிய காவிரி பிரச்னையில், என்னால் முடிந்த அளவுக்குத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து வருகிறேன். கர்நாடக அரசு, சுப்ரீம் கோர்ட்டையே மதிப்பதில்லை. இப்போது, `கொடுக்க மாட்டேன்’ என்றாலும், இன்னொரு `மழை’ அதிகமாக பெய்தால் போதும். நாம் `வேண்டாம்’ என்றாலும் கொடுத்துவிடுவார்கள்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க