tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நாக்பூர், ஜூன் 12-

உண்மையான சேவகன் மக்களுக்கு சேவை செய்வதாக இருந்தால், இதய பூர்வமாக செயல்பட வேண்டும். அப்படி ப்பட்டவன் செய்ததை தம்பட்டம் அடிக்க மாட்டான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மறைமுகமாக சாடினார். 

நாக்பூரில்

நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

 

தேர்தலில் போட்டி என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் உண்மையின் அடிப்படையில் அது இருக்கவேண்டும். கருத்தொற்றுமை ஏற்படுத்துவதே நமது கலாச்சாரம். அதனால் தான் நாடாளுமன்றத்தில் இரு தரப்பு உள்ளது. எந்த பிரச்சினை என்றாலும் பேசித் தீர்க்க வேண்டும். கண்ணியம், நமது கலாச்சாரத்தின் மதிப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். இருதரப்பிலும் கசப்புணர்வை விட்டுத் தள்ள வேண்டும். 

சமீபத்திய தேர்தலில் பிரசாரம் கண்ணியத்தை இழந்து விட்டது. அந்த சூழலே திசைமாறி விட்டது. தவறான பிரசாரம், கட்டுக்கதைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதற்கு நவீன தொழில் நுட்பம் துணைபோனது . இதுதான் நமது கலாச்சாரமா? இதற்காக தான் நாம் படித்தோமா? தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வழி இதுதானா?

தம்பட்டம்

உண்மையான சேவகன் இருப்பவன், தான் செய்வதை சொல்லிக் காட்ட மாட்டான். மக்களுக்கு சேவை செய்வதாக இருந்தால் இதயப் பூர்வமாக சேவை செய்ய வேண்டும். அதற்காக ஆணவம், இறுமாப்பு டன் நடந்து கொள்ளக்கூடாது. 

சங் பரிவார் தொண்டர்கள் செத்த குதிரையைப் போட்டு அடிக்கக்கூடாது. அதை நிறுத்த வேண்டும். என்ன நடந்தது... ஏன் நடந்தது என்று சிந்திப்பதை விட்டு விடுங்கள். தேர்தல் பற்றியும், முடிவுகள் பற்றியும் இனி சிந்திக்க வேண்டாம்.நமது வழியில் நாம் செயல்பட்டோம்.அதோடு விட்டு விடுங்கள். 

இந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ்சை எல்லாம் தேவையின்றி இழுத்தனர். கடந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது. 

மணிப்பூர் பற்றி எரிகிறது. அமைதிக்காக அந்த மாநில மக்கள் ஏங்குகிறார்கள். ஓராண்டு ஆகிவிட்டது. மணிப்பூருக்கு அரசு முன்னுரிமை அளித்து அமைதி ஏற்படுத்த வேண்டும். அது அரசின் பொறுப்பு ஆகும். 

பழங்காலத்தில் நாம் ஒன்று பட்டு இருந்தோம். இப்போது தான் பிரிந்து கிடக்கிறோம்.இந்த நிலை மாறவேண்டும். சாதிய முறை ஒழிக்கப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் செய்த பாவங்களுக்கு இதுவே பரிகாரம். பாரதத்தில் மதங்கள் புகுந்த தால், பல்வேறு காரணங்களால் அவற்றை சிலர் பின்பற்றி னார்கள். இதனால் நமது கலாச்சாரத்துக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. நமது மதம் தான் சரி. . மற்றவை அப்படி அல்ல என்ற மனநிலை மாற்றப்பட வேண்டும். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை மறந்து நாம் முன்னேற வேண்டும். பல்வேறு சவால்களுக்கு தீர்வுகளை உலகமே எதிர்பார்க்கிறது. அவற்றுக்கெல்லாம் இந்தியா தீர்வு காண முடியும். 

இவ்வாறு மோகன் பகவத் பேசினார். 

அவரது இந்த பேச்சு, பிரதமர் மோடிக்கு மறைமுகமாக அறிவுரை கூறுவதாகவே அமைந்துள்ளது.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க