tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, ஜூலை 21–

 

 சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் 20ம் ஆண்டு நினைவு ஸ்தூபி திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவாய், சூரியகாந்த், சுந்தரேசன், விஸ்வநாதன், மகாதேவன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோரும், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.

 உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் 20ஆம் ஆண்டு நினைவு ஸ்தூபியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு' என்ற பெயர் பலகையை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திறந்து வைத்தார். முன்னதாக 'மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளை' என இருந்த பெயர் தற்போது 'மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. விழாவில் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் 200 இ-சேவா மையங்களும் திறக்கப்பட்டன. 

அவ்வையார் சொன்னது...

 விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியது: 

 அவ்வையார், அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என குறிப்பிட்டுள்ளார். இயன்றவரை பிறருக்கு உதவுவது நல்லது. மதுரை தூங்காநகரம், 24 மணி நேரமும் விழித்துக் கொண்டு இருக்கும் நகரம் மதுரை. தமிழ் கலாச்சாரத்தின் நல்ல இயல்புகள் எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பவை. சென்னை உயர் நீதிமன்றம் ஆலமரம் போன்றது. நேற்று நாலடியாரின் ஆங்கில பதிப்பு எனக்கு கிடைத்தது. அதில் நம்பிக்கை குறித்து குறிப்பிடப்பட்ட விசயம் உண்மையானது. வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் உற்றுநோக்கும் வண்ணம் மதுரைக்கிளையின் பல உத்தரவுகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் மதுரைக்கிளை அமைந்துள்ளது.

இளம் வழக்கறிஞர்கள்

நீதிமன்றங்களில் மொழி ஒரு சிக்கலாக வந்த போது, அந்தத்த மாநில மொழிகளில் உத்தரவுகளை அறிந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் போது, அது சமூகத்தின் பிரச்னையை முன்னிறுத்தும் விதமாகவே அமைகிறது. மதுரைக்கிளை நீதியை மட்டுமல்ல, சமூக மாற்றத்தையும் வழங்கியுள்ளது.

 தற்போது நீதிமன்ற விசாரணைகள் இ-கோர்ட், வீடியோ கான்பிரன்ஸ் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வழங்கப்பட்டு வருகிறது. மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. கடின உழைப்பு, தொழில் வழி முறைகளை கடைபிடித்து, தடைகளை உடைத்து இளம் வழக்கறிஞர்கள் முன்னுக்கு வர வேண்டும்.

 இளம் வழக்கறிஞர்களுக்கு தொடக்கத்தில் தேவையான வாழ்வாதார நிதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உலகிலேயே ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முதல் பெண் வழக்கறிஞராக கண்ணகி செயல்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார். 

++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க