tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 5--–தமிழகத்தில் கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில், 10.50 சதவீதத்திற்கும் மேல், வன்னியர் சமூகம் பலன் பெற்றிருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.

 தமிழகத்தில் எம்.பி.சி. பிரிவில் 

வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, அதிமுக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம், தடை விதித்தது. இந்த தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், ‘ஒரு சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு வழங்கும்போது, அதற்கான சரியான, நியாயமான தரவுகளை மாநில அரசு தர வேண்டும்’ என்றது. அதைத் தொடர்ந்து, வன்னியர் இடஒதுக்கீடு பற்றி பரிந்துரைக்க, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை, தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதற்காக ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு, மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக மீது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடும் காட்டமாக அறிக்கை வெ ளியிட்டு வருகிறார். அண்டங் கிடு கிடுக்க போராட்டம் நடத்துவோம். திமுகவுக்கு வன்னிய மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்று மிரட்டல்விடுத்துள்ளார்.இந்த நிலையில், சென்னை, அயனப்பாக்கத்தில் உள்ள கொண்டயன்கோட்டை மறவர் சங்க பிரமுகர் த பி.பொன்பாண்டியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்ட கேள்விகளுக்கு, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை பதிலளித்துள்ளது.

 அதில், அரசு உயர் கல்வி நிறுவனங்கள், அரசு வேலைவாய்ப்புகளில், எம்.பி.சி.,க்கான 20 சதவீத ஒதுக்கீட்டிலும், பொதுப்பிரிவிலும், வன்னியர் சமுதாயம், கடந்த 2018 முதல் 2022 வரை 10.50 சதவீதத்திற்கும் அதிகமாக பலன் பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்: எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு தேர்வு பெற்ற 24,330 மாணவர்களில், 3,354 பேர், அதாவது 13.8 சதவீதம் பேர் வன்னியர் சமுதாயத்தினர். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேர்வு பெற்ற 6,966 மாணவர்களில், 940 பேர் அதாவது 13.5 சதவீதம் பேர் வன்னியர்கள். இளநிலை பல் மருத்துவ படிப்பான பி.டி.எஸ்.,க்கு தேர்வான 6,234 மாணவர்களில், 668 பேர், அதாவது 10.7 சதவீதம் வன்னியர்கள். எம்.டி.எஸ்., மேல்படிப்புக்கு தேர்வான 751 மாணவர்களில், 84 பேர், அதாவது 11.2 சதவீதம் வன்னியர்கள். 

  கால்நடை அறிவியல் படிப்புகளில் 16.5 சதவீதம்; தமிழக அரசு சட்ட கல்லுாரிகளில் 11.7 சதவீதம்; அம்பேத்கர் சட்ட பல்கலையில் 16.3 சதவீதம்; இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்து படிப்புகளில் 9.1 சதவீதம் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைத்துள்ளன.அரசு வேலைவாய்ப்புகள்

 

போலீஸ் எஸ்.ஐ., பணியில் 17 சதவீதம்; உதவி மருத்துவர் 17.1; முதுநிலை ஆசிரியர்கள் 17.5; வனப் பணியாளர் 20.2; டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 பணிகளில் 13.6; குரூப் 3 பணிகளில் 23.5; குரூப் 4 பணிகளில் 19.5; ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் 14.4; துணை கலெக்டர்களில் 11.6 சதவீதம் பேர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

எம்.பி.சி.,க்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டிலேயே வன்னியர் சமுதாயம் தான் அதிகம் பயனடைகிறது என்பதை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, 20 சதவீத எம்.பி.சி., ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால், அந்தப் பட்டியலில் உள்ள சீர்மரபினர் உள்ளிட்ட பிற சமூகத்தினர் பாதிக்கப்படுவர். 

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்பதை, நாங்கள் எதிர்க்கவில்லை. சீர்மரபினர் உள்ளிட்ட சமூகங்களுக்கு நியாயம் வேண்டும். எம்.பி.சி., 20 சதவீத இட ஒதுக்கீடு அப்படியே தொடர வேண்டும் என்பதே, எங்களின் கோரிக்கை என்று பொன்பாண்டியன் கூறினார்.

 ஆனால் இது அரை குறை புள்ளிவிவரங்கள். வன்னியர்களுக்கு இழைத்த துரோகங்களை மறைக்க, தி.மு.க., அரசு முயற்சிக்கிறது. இந்த மோசடி கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறிஉள்ளார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க