tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சிவகாசி, ஆக. 15–

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பெண்களுக்கும் பாரபட்சமின்றி மாதம் ரூ.2500 ரூபாய் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: 

அதிமுகவில், உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி. கட்சியை வைத்துப் பிழைக்க நினைப்பவர்களுக்கு இடமில்லை. 

எந்தக் கட்சியிலும் பிரச்சினை இல்லாமல் இல்லை. மக்களவை தேர்தல், சட்டப் பேரவை தேர்தல் எனப் பிரித்துப் பார்த்து வாக்களிப்பவர்கள் தமிழக மக்கள். இந்த மக்களவைத் தேர்தலில் மோடி வேண்டாம் என்று ஒரு அணியும், மோடி வேண்டும் என்று ஒரு அணியும் போட்டியிட்டது. அவர்களைத் தாண்டி அதிமுக தனது வாக்கு வங்கியை நிரூபித்து உள்ளது.

மாதம் ரூ.2500 தருவோம்

 தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பெண்களுக்கும் பாரபட்சமின்றி மாதம் ரூ.2,500 வழங்கப்படும். மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி வாங்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய நல்ல திட்டங்களை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. திமுக, தாங்கள் செய்யாத திட்டங்களையும் செய்ததாக விளம்பரப்படுத்தி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தொகுதிக்கே வராமல் 3 முறை வெற்றி பெற்றவர் விருதுநகர் எம்பி-யான மாணிக்கம் தாகூர். தமிழக வெள்ளப் பாதிப்புக்கும், மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கும், பட்ஜெட்டிலும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து, திமுக கூட்டணி எம்பி-கள் பிரதமரை முற்றுகையிட்டு இருந்தால் நான் சல்யூட் அடித்திருப்பேன். அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத பட்ஜெட்டே இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது 'கோ பேக் மோடி’ என்று கருப்பு பலூன் பறக்கவிட்ட திமுக, ஆட்சிக்கு வந்த பின் அமைதியாகி விட்டது. மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் கட்சியும் நமக்கு தூசு தான். அதிமுகவுக்கு அழிவு என்பதே கிடையாது. 2026-ல் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும். 

இவ்வாறு அவர் பேசினார்

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க