tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, மே 28

‘‘எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இருளில் வைத்து அவர்கள் (எதிர்க்கட்சியினர்) கொள்ளையடிக்கிறார்கள். எனவே அவர்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன்’’ என்று பிரதமர் மோடி காட்டமாகத் தாக்கினார்.

வரப்போகும் நெருக்கடியை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய நேரம்தான் இந்த தேர்தல். எனவே இது குறித்து மக்களுக்கு விளக்கமளித்து வருகிறேன் என்று தன்னிலையை உணர்த்தினார்.

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பிரதமர் மோடி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வு மீறப்படுகிறது; அதுவும் ஓட்டு வங்கி அரசியலுக்காக மீறப்படுகிறது. தலித்துகள், பழங்குடியினரின் நலம் விரும்பிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் உண்மையில் அவர்களுக்குப் பரம எதிரிகள். எனது தலித், பழங்குடியினர், ஓபிசி சகோதர, சகோதரிகளின் உரிமைகளுக்காக போராடுவேன்.

மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவற்றை பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதில் என்ன ஆதாரம் இருக்கிறது? அவர்களின் குப்பையை உரமாக மாற்றி, அதில் இருந்து நாட்டுக்கு நல்லவற்றை விளைவிப்பேன். மன்மோகன் சிங் ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் மட்டுமே அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2,200 கோடியை பறிமுதல் செய்துள்ளது. 2,200 கோடி ரூபாயை வெளிக்கொண்டுவந்தவரை மதிக்க வேண்டும், துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.

‘‘ராகுல் காந்தி, கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது ஏன்? இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்'. எங்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் சிலருக்கு பாகிஸ்தானிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கிறது. அங்கிருந்து ஆதரவு குரல்கள் வருவது ஏன்? என்பது எனக்கு புரியவில்லை.இது மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும். அதனால் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நான் வகிக்கும் பதவியைப் பொறுத்தவரை இதுபோன்ற பிரச்சனைகளில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றே நினைக்கிறேன்.இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயகம், வளமான தேர்தல் கொள்கைகள், மரபுகளைக் கொண்ட நாடு. இந்தியாவின் வாக்காளர்களும் தங்கள் எண்ணங்களில் முதிர்ச்சியடைந்தவர்கள். அதனால், எந்த வெளிப்புற சக்தியாலும் பாதிக்கப்படமாட்டார்கள்.

ஜெயிலுக்குப்

போவது யார்?

‘‘யார் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதை பிரதமர் மோடிதான் முடிவு செய்வார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருக்கிறார். “இவர்கள் அரசியல் சாசனத்தைப் படித்தால் நன்றாக இருக்கும், நாட்டின் சட்டத்தைப் படித்தால் நன்றாக இருக்கும், நான் யாரிடமும் எதுவும் சொல்லத் தேவையில்லை’’.

ஒடிசா எதிர்காலம்

எனக்கு முக்கியம்

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நட்பு ரீதியிலான உறவை நாங்கள் பின்பற்றி வருகிறோம். ஜனநாயக நாட்டில் பகை என்பதற்கு இடம் இல்லை. இப்படி இருக்கும் சூழலில் நான் ஒடிசாவின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வதா அல்லது நவீன் பட்நாயக் உடனான உறவு முக்கியமா என்ற முடிவை எடுக்க வேண்டி இருந்தது. எனக்கு ஒடிசாவின் எதிர்காலம் தான் முக்கியம். அதற்காக நான் சில தியாகங்களை செய்ய வேண்டி இருந்தது. தேர்தலுக்கு பிறகு அனைவரையும் நான் சமாதானம் செய்வேன். இங்கு எனக்கு யாருடனும் பகை என்பது கிடையாது.

கடந்த 25 ஆண்டு காலமாக ஒடிசாவில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஒட்டுமொத்த ‘சிஸ்டத்தையும்’ ஒரு குழு தனது கைகளில் வைத்து உள்ளது. அதன் பிடியில் இருந்து ஒடிசா வெளிவந்தால் வளர்ச்சிப் பாதையை எட்டும்.

இயற்கை வளங்கள் அதிகம் கொண்ட மாநிலம். அந்த மாநிலத்தின் மக்கள் வறுமையில் வாடுவதை பார்த்து எனது மனம் வருந்துகிறது. இதற்கு மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அரசு தான் காரணம். அந்த மாநிலத்தின் அடையாளம் மற்றும் மக்கள் தங்களது உரிமையை அவசியம் பெற வேண்டும்.

தலையெழுத்து மாறும்

ஒடிசாவின் தலையெழுத்து மாறும். ஆட்சி மாற்றம் நிகழும். தற்போது ஆட்சியில் உள்ளவர்களின் ஆட்சி காலம் ஜுன் 4-ம் தேதியுடன் காலாவதி ஆகிவிடும் என நான் சொல்லி இருந்தேன். வரும் ஜுன் 10-ம் தேதி அன்று பாஜக உறுப்பினர் முதல்வராக பொறுப்பு ஏற்பார். மேற்குவங்கத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி பிழைப்புக்காக போராடுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் நாங்கள் 3 எம்.எல்.ஏ.வாக இருந்தோம், பின்னர் அம்மாநில மக்கள் எங்களுக்கு 80 இடங்களை கொடுத்தனர். இந்த முறை மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. பெரிய வெற்றியைப் பெறும்’’.

இவ்வாறு மோடி கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க