tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, செப். 25–

அமைச்சரவை மாற்றம் மற்றும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, ‘‘ஏமாற்றம் இருக்காது; மாற்றம் இருக்கும்,’’ என, முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

 அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும்’ என, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம், அதாவது முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன், துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்படுவார் என்ற தகவல் பரவியது. வெளிநாடு புறப்படும் முன் முதல்வர் அளித்த பேட்டியில், ‘மாறுதல் ஒன்றுதான் மாறாதது. பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார்.

 

 அமெரிக்க பயணம் முடித்து, அவர் திரும்பியுள்ள நிலையில், கடந்த வாரத்தில் மீண்டும் உதயநிதி துணை முதல்வர் ஆகப்போகிறார் என தகவல் பரவியது. எந்த மாற்றமும் நடக்காததால், ஆளுங்கட்சி வட்டாரத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 இதற்கிடையில் மூத்த அமைச்சர்கள் சிலர், உதயநிதியை துணை முதல்வராக நியமிக்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்களை சமாளிக்க, மூத்த அமைச்சர் ஒருவருக்கும், உதயநிதியுடன் சேர்த்து துணை முதல்வர் பதவி வழங்க, ஆலோசனை நடப்பதாகவும் தகவல் பரவியது.

மாற்றம் நிச்சயம்

 

எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், நேற்று சென்னை கொளத்துார் தொகுதியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர், செய்தியாளர்களை சந்தித்தார்.

 அப்போது, ‘‘பருவ மழையை எதிர்கொள்ள, தயார் நிலையில் உள்ளோம். அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், தலைமை செயலர் ஆலோசனை நடத்தி உள்ளார். நானும் இரண்டு நாட்களில் ஆலோசனை நடத்த உள்ளேன். வெளிநாட்டு தொழில் முதலீடுகள் குறித்த, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, அமைச்சர் ராஜா ஏற்கனவே தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அதுவே வெள்ளை அறிக்கை தான்,’’ என்றார்.

 அதைத் தொடர்ந்து, அமைச்சரவை மாற்றம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, ‘‘ஏமாற்றம் இருக்காது. நிச்சயம் மாற்றம் இருக்கும்,’’ என்றார் முதல்வர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க