tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தருமபுரி , பென்னாகரம் அடுத்துள்ள நாகமரை அருகே கருங்காலி மேடு என்ற கிராமத்தில் ஏரியூர் ஒன்றிய தமிழியக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம், கிராம மக்களும் அறிவியலும், இலவச மரக்கன்றுகள் மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வென முப்பெரும் விழா நடத்தியது.

 

நிகழ்விற்கு சமூக ஆர்வலர் மு.பிரேம்குமார் தலைமை வகித்தார்.

 

சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகி இயற்கை முத்துக்குமார், ஏரியூர் ஒன்றியத்தின் தமிழியக்கத்தின் செயலாளர் நா.நாகராஜ் , நாகமரை வார்டு உறுப்பினர் சின்னு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 

ஏரியூர் ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொருளாளர் கோ.முத்தரசு வரவேற்று பேசினார்.

 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஏரியூர் ஒன்றிய செயலாளர் த.சந்தோஷ்குமார் , சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் கிருஷ்ணன், ரகுமான், வைரம், குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் மற்றும் தமிழியக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.பழனி சிறப்புரை வழங்கினார்.

 

அவர் பேசுகையில் " பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிகம் நேரத்தை ஒதுக்கி பேச வேண்டும். இன்றைய காலத்தில் புத்தக வாசிப்பு என்பது அவசியமானது. பள்ளி குழந்தைகள் இருக்கும் வீட்டில் குறைந்தபட்சம் நீதி நெறி கதைகள் கொண்ட புத்தகங்கள் அவசியம் இருக்க வேண்டும். மரங்களை பாதுக்காத்து வளர்க்க வேண்டும். கைபேசியை நல்லதற்கு பயன்படுத்த வேண்டும் அதனை வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்த வேண்டும். நம்முடைய தாய் மொழியை அழியாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் மேலும் படிப்பதற்கும், விளையாடுவதற்கும் அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றார். நிறைவாக கல்லூரி மாணவர் பெ.நந்தகுமார் நன்றி கூறினார்.

 

நிகழ்வில் 65 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள், நோட், பேனா வழங்கப்பட்டது.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க