tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, செப். 22–

நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்றால் ஒருவருடைய நாமம் மட்டுமே பாடப்படும் என்று கமல்ஹாசன் கூறினார்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. இதில் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

 பொதுக்குழுவில் கமல் பேசியதாவது: 

  சின்ன சின்ன பதவிக்கு ஆசைப்படாதீர்கள். இதுதான் எனக்கு நான் கொடுத்துக் கொண்ட அறிவுரை. அதை அப்படியே உங்களுக்கு வழங்குகிறேன். 

 நீங்கள் அயர்ந்து இருக்கும் நேரத்திலும் நேர்மைக்கு சோதனை வரும். எனக்கும் வந்து இருக்கிறது. நீங்கள் எல்லாம் எதுக்கு அரசியல் போறீங்க என்று என்னை கேட்டார்கள். அதெற்கெல்லாம் தனியாக சாதுரியம் வேண்டும் என்றார்கள். நான் என்ன வேட்டையாடுதற்காகவா போக போகிறேன். நான் தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கிறேன். அது நிரந்தரம் இல்லை. 

ஒற்றை நாமம்

  நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்றால் ஒருவருடைய நாமம் மட்டும் பாடப்படும். அனைத்து சாலைகளிலும் உள்ள டிராபிக் சிக்னல் ஒரே நேரத்தில் போட்டால் என்ன ஆகும். ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை யோசிக்க நேரம் கொடுக்க வேண்டும். அந்த அரியாசனத்தில் யாரை உட்கார வைக்க வேண்டும் என்று மக்கள் தீர்மானிப்பார்கள். மகாத்மா காந்தி, அம்பேத்கர் கொண்டு வந்த சட்டங்களை மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஜனநாயகத்தை நாம் காக்க வேண்டும். 

 

 கோயம்புத்தூரில் நடந்தது தோல்வி என்றால், பா.ஜ‌. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது வெற்றி அல்ல. நான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை காட்ட வேண்டிய இடத்தில் காட்டுவேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்தார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார். நல்லா பிள்ளைகளை வளர்த்ததாக கூறினார். நம்மை பற்றி இன்னும் 10 வருடம் கழித்து தெரியும். 2026 யை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். வேலை செய்து தான் ஆக வேண்டும். அன்பு கட்டளையாக ஏற்று கொள்ளுங்கள்‌. 

முழுநேர அரசியல்வாதி

கமல்ஹாசன் முழு நேர அரசியல்வாதி இல்லை என்பது பொருந்தாது. வேலை செய்யும் நேரத்தில் செய்தால் போதுமானது. யாரும் இங்கு முழு நேர அரசியல்வாதி அல்ல. என்னை மறுபடியும் சினிமாவுக்கு சென்று விட்டார் என்கிறார்கள். நான் கோட்டைக்குச் சென்று கஜானாவை திறந்து பணம் எடுப்பேனா.? வேலைக்குப் போய்தான் ஆக வேண்டும். என்னை முழுநேர அரசியல்வாதி இல்லை என்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் எல்லாம் சீட்டாடுவதை நான் பார்த்திருக்கிறேன். 8 மணி நேரம் தூங்கும் எவனும் முழு அரசியல்வாதி கிடையாது. இருக்கும் நேரத்தில் ஒழுங்காக வேலை செய்தால் போதுமானது.  

  முழு நேர அரசியல்வாதியாகி குடும்பத்தை தெருவில் விட்டுவிட்டு, என் பின்னால் வாருங்கள் என்று நான் சொல்லவில்லை. நாட்டின் பிரதமராக தமிழன் வரவேண்டும். அதற்கு நாம் தயாராக வேண்டும். நான் அரசியலுக்கு வந்தது, எனக்காக இல்லை, நாளைக்காக தான். ஒருவரை ஒருவர் இடறி விடும் வேலை செய்தால் நான் உங்கள் தோளிலிருந்து கையை எடுத்து விடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க