tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூன் 9–

ஓ.பி.எஸ்.அணியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி வெளியே­றி­னர்.

 

அ.தி.மு.க.,வில் பிரிந்து கிடக்கும் தலைவர்களை ஒன்றிணைத்து, கட்சியை பலப்படுத்தும் வகையில் முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியுடன் இணைந்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்புக் குழுவை துவக்கி உள்ளனர். இது­கு­றித்து நேற்று 

அவர்கள் அளித்த பேட்டி:

 

* ஜே.சி.டி.பிரபாகர்: அ.தி.மு.க.,வில் பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்பது, தமிழகம் முழுதும் உள்ள முன்னணி நிர்வாகிகளின் கருத்து. எப்பாடுபட்டாவது கட்சியை, தலைவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி உள்ளோம். விருப்பு, வெறுப்பு இல்லாமல், அ.தி.மு.க.,வின் அனைத்து பிரிவுகளிலும் உள்ளவர்கள், இதற்கான பணியை செய்வர். 

 

அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில், பன்னீர்செல்வத்துக்கு உறுதுணையாக இருந்தேன். கட்சி ஒருங்கிணைப்புக் குழு என வைத்து விட்டு, ஒரு அணி நிர்வாகியாக இருக்க முடியாது என்பதால், இந்த நிமிடத்தில் இருந்து அதிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

 

தொண்டர்கள் தங்கள் கருத்துகளை, கட்சி வலுப்பெற தலைவர்களுக்கு என்ன பொறுப்பு அளிக்கலாம் என்பதை, 44, கோத்தாரி ரோடு, சென்னை – 34 என்ற முகவரிக்கு எழுதி அனுப்பலாம். எங்கள் மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

பிரிந்துள்ள தலைவர்களை சந்திக்க அனுமதி கேட்கப் போகிறோம். அவர்கள் இசைவு தெரிவித்தால் சந்திப்போம். மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளோம். பழனிசாமி இறங்கி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

 

* புகழேந்தி: நானும், கே.சி.பழனிசாமியும் எதிரெதிராக இருந்தோம். ஜே.சி.டி.பிரபாகர் அறிவுரையின்படி ஒன்றாகி உள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்.  

 

பன்னீர்செல்வத்துடன் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் ஒரு திசையை நோக்கி பயணிக்கிறார். அதில், எங்களுக்கு ஒப்புதல் இல்லை. யாரோ மொத்தமாக அ.தி.மு.க.,வை அழிக்க பார்க்கின்றனர். தேசிய கட்சிகள் இரண்டாம் இடத்திற்கு வருவதை அனுமதிக்க முடியாது. பா.ஜ., – தி.மு.க., என்ற நிலை ஏற்படுவதை பார்க்க முடியாது. 

எனவே, அ.தி.மு.க.,வினர் அனைவரையும் ஒன்றிணைக்க, ஒருங்கிணைப்புக் குழுவை துவக்கி உள்ளோம். யாரும் கவுரவம் பார்த்து, கட்சியை நாசப்படுத்த வேண்டாம்.  

 

* கே.சி.பழனிசாமி: மக்­க­ள­வைத் தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க., தொண்டர்களுக்கு பேரிடியாக உள்ளன. இதற்கு முன்பும் அ.தி.மு.க., தோல்வி அடைந்துள்ளது. ஆனால், இவ்வளவு ஓட்டு வங்கி சரிவைக் கண்டதில்லை. பெரும்பாலான தொண்டர்கள், பொதுமக்கள், அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என்கின்றனர். அதற்காக கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

 

தேசிய கட்சிகளுக்கு அடிபணிந்தோ, அவர்களை சார்ந்தோ, அவர்கள் கருத்தை பிரதிபலிக்கும் பிரதிநிதிகளாக, அ.தி.மு.க.,வினர் இருக்கக் கூடாது. எந்த குடும்பத்தின் பிடியிலும் சென்று விடக்கூடாது. 

 

தேர்தல் முடிவுகளை பாடமாக எடுத்து, அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இன்னொரு தோல்வியை கட்சி பெறுமானால், தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பழனிசாமி, பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை சந்தித்து பேச முயற்சிப்போம். அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

***

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க