tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, டிச. 13–
பொதுத்துறை வங்கிகளில் கண்மூடித்தனமாக கடன்கள் வழங்கியதால், வங்கிகள் சரிவுக்கு காங்கிரசே காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
 எதிர்க்கட்சி தலைவர்  ராகுல் நேற்று முன்தினம் கூறுகையில், ‘‘ஒவ்வொரு இந்தியனும் எளிதாக கடன் பயன்பெறும் வகையில், பொதுத்துறை வங்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்த வங்கிகளை, தனியார் நிதி நிறுவனமாக்கி, பெரிய பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட்களுக்குமானதாக மாற்றி விட்டது.  நண்பர்களுக்கு அளவில்லாமல் பணத்தை வாரி வழங்குவதை பிரதமர் மோடி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  நேற்று கூறியதாவது: 
அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில்தான்,  பொதுத்துறை வங்கிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன்களில், அதிக கவனம் செலுத்தி வருகிறோம். காங்கிரஸ் ஆட்சியின் போது கண்மூடித்தனமாக கடன்களை வாரி வழங்கியதால், பொதுத்துறை வங்கிகள் சரிவை சந்தித்தன. ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்து, தங்களின் கூட்டாளிகளுக்கு கடன் பெற்றுக் கொடுத்தது காங்கிரஸ் ஆட்சியில் தான்.
கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் மூலம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 238 சதவீதமும், ரூ.50 லட்சத்திற்கு அதிகமாக  கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 300 சதவீதமும் அதிகரித்துள்ளது.  உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி பொதுத்துறை வங்கி ஊழியர்களின் கடின உழைப்பை ராகுல் அவமதிக்கிறார்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ராசி பலன்

கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து முடிவு செய்யவும். வியாபார ரீதியான பயணங்களில் சாதகமான சூழல்கள் அமையும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.... மேலும் படிக்க

சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செய்யும் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சகோதரர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தொழிலில் புதுவிதமான அனுபவம்... மேலும் படிக்க


மருமகன் வழியில் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுபகாரியங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு, புகழ்... மேலும் படிக்க

உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் காணப்படும். காப்பீடு தொடர்பான புரிதல்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. திடீர் தன வரவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள்... மேலும் படிக்க

ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த துறைகளில்... மேலும் படிக்க

திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசுப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள்... மேலும் படிக்க

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வது மனதிற்கு நல்லது. உத்தியோகப் பணிகளில் அமைதியான சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சு வார்த்தைகள் கைகூடும்.... மேலும் படிக்க

பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் லாபம் மேம்படும். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். மனதில் கற்பனை சார்ந்த புது... மேலும் படிக்க

உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். துறை... மேலும் படிக்க

உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள்... மேலும் படிக்க