tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

கமுதி, அக், 13

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி ஸ்ரீ மீனாட்சி சமதே சுந்தரேசுவரர் திருக்கோவில் 

மகரநோன்பு திருவிழா கொண்டாடப்பட்டது.

 

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட கமுதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சம்மதை சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு நவராத்திரி திருவிழா சென்ற வாரம் காப்புகட்டுடன் துவங்கியது.

கோவிலின் உள்ளே கொலு வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்புபூஜை நடந்தன, சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் கொலுவை கண்டுகளித்து,

சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். நேற்று முன்தினம் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.கடைசி நாளான நேற்று மகர நோன்பு 

 முன்னிட்டு நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக தேசியத்தலைவர் சுதந்திர போராட்ட தலைவர் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் குடும்பத்தின் சார்பில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைக்கு தேவையான மலர் மாலைகள், பூஜை பொருட்கள், தேர் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். தேவர் உயிருடன் இருந்த வரை அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. பிற்காலத்தில் தேவரின் மறைவுக்குப் பின் அவரது உறவினர்கள் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனா அம்மாள் அவரது மருமகன்கள் பழனி, தங்கவேல், வெள்ளைச்சாமி, உள்ளிட்டோர் மகர் நோன்பு நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் கமுதி பேருந்து நிலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்திய பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக சென்று கண்ணார்பட்டி விலக்கில் வில் அம்பு விடும் மகர் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது.பின்பு கமுதி முக்கியமாக மேட்டுத்தெரு ,செட்டியார் பஜார், வழியாக ஊர்வலமாக வந்தது தேவராட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் ஆட்டம், வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், இராமசந்திர பூபதி, போஸ்த்தேவர், இராமநாதன், செல்வம், பாஸ்கரபூபதி,வி.கே.ஜி.முத்துராமலிங்கம்,முக்கிய பிரமுகர்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க