tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோல்கத்தா, ஜூலை 18-–

மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸை, அவதூறாகவோ, தவறாகவோ பேசக்கூடாது என்று முதல்வர் மம்தாவுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

 மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,அவரது கட்சி நிர்வாகி குணால் கோஷ், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சயந்திகா பானர்ஜி, ரேயட் உசைன் சர்க்கார் ஆகியோர் சமீபத்தில் கவர்னரை கடுமையாக விமர்சித்தனர். முதல்வர் மம்தா அளித்த பேட்டியில், ‘ராஜ்பவனில் பாலியல் வம்புத்தனம் நடப்பதாக சில பெண் ஊழியர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர். அதுபற்றி விசாரித்த போலீசாருக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது. இந்த விவகாரங்களால் ராஜ்பவனுக்கு செல்ல பெண்கள் அசசப்படுகின்றனர்’ என்றெல்லாம் விமர்சித்திருந்தார். குணால் கோஷ் மற்றும் இரு எம்எல்ஏக்கள் இதே பாணியில் கவர்னரை விமர்சித்திருந்தனர்.

இதுகுறித்து கவர்னர் அளித்த பேட்டியில், ‘மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற வகையில், அரசின் ஆட்சி நிர்வாக தவறுகள் குறித்து கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டு வருகிறேன். இது, கவர்னர் பதவி அடிப்படையிலான நடவடிக்கை. ஆனால், இதில் அரசியல் உள்நோக்கம் கற்பித்து, என் மீது தனிப்பட்ட முறையில், தரக்குறைவான முறையில் பொய் குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சி ஜோடித்து வருகிறது. ராஜ்பவனில் பாலியல் வம்புத்தனம் எதுவும் இல்லை என்பதை சிசிடிவி பதிவுகளை வெளியிட்டு நிரூபித்திருக்கிறோம் என்றார். இதையடுத்து கோல்கட்டா ஐகோர்ட்டில் கவர்னர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் முதல்வர் மம்தா, குணால் கோஷ் மற்றும் இரு எம்எல்ஏக்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை, நீதிபதி கிருஷ்ணா ராவ் விசாரித்தார். விசாரணையில், ‘எங்கள் பேச்சுகளில் அவதுாறு எதுவும் இல்லை’ என்று முதல்வர் மம்தா உள்ளிட்டோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதி கிருஷ்ணா ராவ் பிறப்பித்த உத்தரவு:

அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. ஆனால், கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி யாரையும் அவதுாறு செய்ய யாருக்கும் அனுமதியோ, உரிமையோ கிடையாது.

எதிர்மனுதாரர்களின் (முதல்வர் மம்தா உள்ளிட்ட 4 பேர்) விமர்சனப் பேச்சுகளில், மனுதாரரின் (கவர்னர்) நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் இருக்கிறது. இதை அனுமதிக்க முடியாது.  

மனுதாரர் (கவர்னர்), அரசியல் சட்ட பதவியில் இருப்பவர். அவரால், தனிப்பட்ட அவதுாறு விமர்சனங்களுக்கு பதில் அல்லது விளக்கம் அளித்துக் கொண்டிருக்க முடியாது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டு கொண்ட மனு, ஒரு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதன்பிறகும் அவர் மீது குற்றம்சாட்டி அவதூறு தொடர்கிறது. இதற்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு வெளியிடப்படாவிட்டால், மனுதாரரின்(கவர்னர்) நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேச்சுகளைத் தொடர்வதற்கு எதிர்மனுதாரர்களுக்கு அனுமதி வழங்குவதாக ஆகிவிடும். எனவே, ஆகஸ்ட் 14ம் தேதி வரை, மீடியாக்கள் அல்லது சமூக வலைதளங்கள் மூலம், மனுதாரருக்கு (கவர்னர்) எதிராக அவதூறு பரப்புவதோ, அவருக்கு எதிராக தவறான தகவலைக் குறிப்பிட்டோ, எதிர்மனுதாரர்கள் (முதல்வர் மம்தா உள்ளிட்ட 4 பேர்) எந்த விமர்சனத்தையும் வெளியிடக் கூடாது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். 

++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க