tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பெங்களூரு, ஏப்.29-

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி முதல்கட்ட தேர்தல் கடந்த 26-ந் தேதி நடந்து முடிந்தது. இதில் 69.56 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் வட கர்நாடகத்தில் தார்வார், பெலகாவி, தாவணகெரே, கலபுரகி, பாகல்கோட்டை, சிக்கோடி உள்பட 14 தொகுதிகளில் வருகிற 7-ந் தேதி 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கர்நாடகத்தில் நேற்று நாள் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். காலை 11 மணிக்கு தொடங்கி மாலை வரை 4 பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பா.ஜ.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

நேற்று காலை பெலகாவி டவுனில் உள்ள மாலினிசிட்டியில் நடைபெற்ற பா.ஜ.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து தாவணகெரே, உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற பா.ஜ.க. பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

பெலகாவியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துவிட்டது. காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலை செய்கிறது. பெங்களூருவில் குண்டு வெடித்தது. காங்கிரஸ் இப்போதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை (முஸ்லிம்) கவரும் அரசியலை செய்து வருகிறது. மைசூரு மன்னர்கள் செய்த வளர்ச்சிப்பணிகளால் நாடு அவர்களை கவுரவத்துடன் பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறது. இந்து மன்னர்களை காங்கிரஸ் அவமதிக்கிறது.

இந்து அரசர்களை

சர்வாதிகாரிகள் என அவதூறு

இந்து அரசர்களை, சர்வாதிகாரிகள் என்று அவதூறாக பேசி உள்ளார் காங்கிரசின் இளவரசர் (ராகுல் காந்தி). மக்களின் நிலங்களை இந்து மன்னர்கள் அபகரித்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். சத்ரபதி சிவாஜி, ராணி சின்னம்மா உள்ளிட்ட பல்வேறு இந்து மன்னர்களை அவர் அவமதித்து உள்ளார். வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு பேசி வருகிறார்.

முகலாய மன்னர் அவுரங்கசீப், நூற்றுக்கணக்கான இந்து கோயில்களை இடித்தார். ஏராளமான பசுக்களை கொன்று குவித்தார். ஆனால், அவுரங்கசீப் மற்றும் இதர முகலாய மன்னர்களின் கொடூரங்கள் குறித்து காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) ஒரு வார்த்தைகூட பேசுவது இல்லை. முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன் என்பதற்கு அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

நவாப், சுல்தான்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது இல்லை. காங்கிரசின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஈர்க்கும் அரசியல் மக்களுக்கு தற்போது புரிந்துள்ளது. காங்கிரஸ் கட்சி எங்கு வெற்றி பெறுகிறதோ அங்கு வளர்ச்சி மாயமாகிவிடும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த நாள் முதல் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு காங்கிரஸ் அரசு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. கிருஷி சம்மான் திட்டத்தில் முன்பு இருந்த கர்நாடக பா.ஜ.க. அரசு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியது. இதை காங்கிரஸ் அரசு ரத்து செய்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களின் தாலி தப்பாது. மோடி இருக்கும் வரை காங்கிரசின் இந்த சதித்திட்டம் நடைபெறாது.

பயங்கரவாதத்திற்கு கடிவாளம்

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. காங்கிரசாரால் ஆங்கிலேயர்களின் மனநிலையில் இருந்து வெளியே வர முடியவில்லை. நமது நாட்டில் பயங்கரவாதத்திற்கு கடிவாளம் போட்டுள்ளோம். பெலகாவியில் தலித் பெண் தாக்கப்பட்டு நிர்வாணப்படுத்தப் பட்டார். உப்பள்ளியில் மாணவி நேகா கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் மக்களிடையே ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் குண்டு வெடித்துள்ளது.

நேகா கொலையில் காங்கிரஸ் அரசு அக்கறையின்றி இருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

கித்தூர் ராணிசென்னம்மாவை அவமதித்த கட்சி காங்கிரஸ். அவுரங்கசீப்பின் கற்பழிப்புகள், இந்து கோவில்களை இடித்தது உள்ளிட்ட விஷயங்கள் நினைவுக்கு வருவது இல்லை. கோவில்களை அவமதிப்பவர் களுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துக்கொண்டுள்ளது. நாட்டை பிளவுபடுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்களை காங்கிரஸ் ஆதரிக்கிறது. காங்கிரசின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கவரும் கொள்கை, அவர்களின் தேர்தல் அறிக்கையிலும் வெளிப்பட்டுள்ளது.

பரம்பரை சொத்துகளுக்கு வரி

பரம்பரை சொத்துகளுக்கு வரி விதிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குழந்தைகளுக்காக சேகரித்த பணம், சொத்துகளை நீங்கள் காங்கிரசுக்கு வழங்க முடியாது. சொத்துகளை குழந்தைகளுக்கு நீங்கள் வழங்க 55 சதவீத வரியை காங்கிரஸ் விதிக்கும். அதை பெற்று அவர்களின் வாக்கு வங்கிக்கு வழங்கும் நோக்கத்தில் உங்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். இத்தகைய சிந்தனைகளை கொண்டுள்ள காங்கிரசுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருப்பார்.

பெங்களூரு குண்டுவெடிப்புக்கு சிலிண்டர் வெடித்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். குண்டு வெடித்ததா? அல்லது காங்கிரஸ் தலைவர்களின் மூளை வெடித்ததா?. அண்டை நாடு (பாகிஸ்தான்) ஒரு காலத்தில் இந்தியாவுக்கு பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்தது. நமது ராணுவ வீரர்களை கொன்றுவிட்டு தப்பி விடுவார்கள். ஆனால் இப்போது துல்லிய தாக்குதல் நடத்தப்படுகிறது. இது தான் புதிய இந்தியா. அவர்கள் அவர்களின் வீட்டுக்குள்ளேயே கொல்லப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், பெலகாவி, சிக்கோடி தொகுதிகளின் பா.ஜ.க. வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நடந்த பிரச்சார கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க