tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, நவ. 17–
'பருவ வயதில் காதல் வசப்பட்ட இருவர், ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது இயல்பானது. அது குற்றமாகாது' என, உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த 23 வயது இளைஞர், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன் மீது,  ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீசார் 2022ல் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசு வழக்கறிஞர் வாதாடியதாவது:மனுதாரரும், 19 வயது இளம் பெண்ணும் காதலித்து உள்ளனர். ஒரு நாள் இரவில் தனியாக சந்தித்தபோது மனுதாரர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதுகுறித்து தன் பெற்றோரிடம் அந்த இளம்பெண் தெரிவித்தார். 
பின், மனுதாரரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினார். அதற்கு மனுதாரர் மறுத்துவிட்டார்.  
இது தொடர்பான புகாரில் இந்திய தண்டனை சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
குற்றம் அல்லஇதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

உடல் ரீதியான உறவை ஏற்படுத்தும் நோக்கத்தில் விரும்பத்தகாத பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுபவர் மீது தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பருவ வயதில் காதல் வசப்பட்ட இருவர், ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது இயல்பானது. 
இது எப்படி, மேற்கண்ட சட்டப்பிரிவின்கீழ் குற்றமாகும்?
அவ்வகையில் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்தபோதும், அவர் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. 
அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அது, சட்டத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக அமையும். 
இவ்வழக்கின் இறுதி அறிக்கையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என, உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.
ஆனாலும் போலீசார், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். 
இதையும், மனுதாரர் மீதான வழக்கையும் இந்த நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்கிறது.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க