tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 29–

திமுக இல்லாவிட்டால் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெபாசிட் போய்இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன் கடுமையாக சாடி உள்ளார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், மக்களவைத் தேர்தலுக்கு பின்னர், திமுகவை சாடி வருகிறார். கடந்த முறை வென்ற பின்னரும் கூட திமுகவை விமர்சித்து வந்ததால் அவருக்கு தேர்தல் வேலை பார்க்க மாட்டோம் என்று திமுகவினர் போர்க்கொடி உயர்த்தினர்.பின்னர் முதல்வர் ஸ்டாலின் தலையீட்டினால், வேண்டா வெறுப்பாகவே கார்த்தி சிதம்பரத்துக்கு பிரசாரம் செய்தனர். இப்போது ஜெயித்த பிறகு மீண்டும் வசை பாடத் துவங்கி விட்டார். புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில், 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் அமையும் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும், கூட்டணியில் இருப்பதால் கூனி குறுகி இருக்கக்கூடாது. மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும்.கம்யூனிஸ்டுகள் போல செயல்படவேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் 

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி என்கவுன்டர் குறித்து அவர் கூறிய கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 இந்தநிலையில் கார்த்தி சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலுக்கு முன் சிவகங்கையில் இருந்த அத்தனை காங்கிரஸ்காரர்களும், டெல்லிக்கு சென்று கார்த்திகிற்கு இடம்கொடுக்கக்கூடாது என்றனர். சிதம்பரத்திற்காக பல எதிர்ப்புகளை மீறி அவர்களுக்கு வாய்ப்பு தந்தனர். முழுக்க முழுக்க திமுகதான் அங்கு உழைத்தது. காங்கிரஸிலே மாவட்ட தலைவர்களாக இருந்தவர்கள், வட்டார தலைவர்களாக இருந்தவர்கள் யாரும் வேலை செய்யவில்லை. ஓட்டு போட்டார்களா இல்லையா என்பதுகூட தெரியாது. திமுக அவருக்கு உதவி செய்யவில்லை என்றால் டெபாசிட் பெறுவதுகூட பெரிய விஷயமாக இருந்திருக்கும். திமுக தயவால் தான் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது., கார்த்தி சிதம்பரம் கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்கிறார். காங்கிரஸ் கட்சி யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என தேர்தலுக்கு முன்பே கார்த்தி சிதம்பரம் கூறி இருக்கலாமே... அவர் சுயநலத்துடன் பேசி வருகிறார். கட்சி நலனை விட தேசத்தின் நலனே முக்கியம் என்று இளங்கோவன் காட்டமாக கூறிஉள்ளார்.

 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களே அதிகம். திமுக பெருந்தன்மையோடு செயல்பட்டு இருக்கிறது. திமுகவால் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. எம்பி ஆன பின் திமுகவுக்கு நெருக்கடியையும் இக்கட்டையும் ஏற்படுத்துவது போன்ற பேச்சு எந்த விதத்தில் நியாயம்?   

இவ்வாறுஅவர் கூறினார்.

கார்த்தி சிதம்பரம் பதில்

இதற்கு கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்தார். புதுக்கோட்டையிலும், சிவகங்கையிலும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோது மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் இருந்தனர். 

அதில் நான் என்ன பேசினேன் என்பதை அவர் கேட்டாரா? என்பதே சந்தேகமாக உள்ளது. அவர் மூத்த தலைவர். கட்சி வளர வேண்டும் என்று நான் சொன்னதை நாட்டுக்குக் கேடு என்று சொல்கிறார். அவரை விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை. நான் பேசியது சரியா? தவறா? என்பதை கட்சி தொண்டர்களிடம் கேளுங்கள். மேடையில் இருந்த கட்சி தலைவர்களுக்கும் தெரியும். நான் கூட்டணி வேண்டாம் என்று பேசவில்லை. கூட்டணியால் தான் வெற்றி பெற்றேன் என்று தான் பேசினேன். இளங்கோவன் மூத்த தலைவர் என்பதால் அவரை விமர்சிக்க விரும்பவில்லை என்றார்.

++++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க