tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, மே.22-

தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் 2½ டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக மாநிலத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த 16-ந் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு மே மாதத்துக்கு வழங்க வேண்டிய 2.5 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.அல்தார் தலைமையில் டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான அதிகாரிகள் பேசுகையில், கடந்த 15-ந் தேதி வரை சுமார் 96.456 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்காமல் இருப்பதாகவும், ஆணையத்தின் கடந்த கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நீரையும் கர்நாடகம் வழங்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலம் 4 பெரிய அணைகளில் தண்ணீரை தேக்கி வைத்துக்கொண்டு, குடிநீர் தேவையை காரணம் காட்டி தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் தந்திரத்தை கையாள்வதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும், மே மாத தண்ணீரையும், ஜூன் மாதம் பிலிகுண்டுலுவில் 9.19 டி.எம்சி. தண்ணீரையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது தவிர மேகதாது அணை விவகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்தில் பேசக்கூடாது என்றும், அது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை மீதான தீர்மானம் பற்றியும் எடுத்துரைத்தனர்.

அதுபோல சிலந்தியாறில் தடுப்பணை கட்டுவதற்கான விவரங்களை கேரள அரசு தமிழக அரசிடம் தெரிவிக்காமல் இருப்பதாகவும் கூறினர்.

4 மாநில அதிகாரிகள் தெரிவித்த கருத்துகளையும் கேட்டுக்கொண்ட ஆணைய தலைவர் எஸ்.கே.அல்தார், மே மாதத்துக்கு தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்து விடவேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க