tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 31–

ஊருக்கெல்லாம் உதார் விட்டுக் கொண்டிருந்த ராமதாஸை முதல்வர் ஸ்டாலின் ஓரம் கட்டி விட்டார். குடு குடு 

வயசுல கிடு கிடு போராட்டமா? ராமதாஸ் பின்னால்வன்னியர் யாரும்போக மாட்டார்கள் என்று வன்னியர் 

கூட்டமைப்பு தலைவர் சி.என். ராமமூர்த்தி திட்டவட்டமாக கூறினார்.

பா. ம. க. நிறுவனர் ராமதாஸ், சமீபத்தில் முதல்வரை ஒருமையில் கடுமையாக விமர்சித்திருந்தார். வன்னியர் களுக்கு 

தனியாக 10.5 சதவீத இட ஒதுக்கீடு வலியுறுத்தி அண்டம் கிடுகிடுக்க போராட்டம் நடத்தப்போவதாக வன்முறையை 

தூண்டும் வகையில் பேசி இருந்தார். 

இதற்கு பதிலடியாக வன்னியர் சங்கத் தலைவர் சி.என். ராமமூர்த்தி அளித்த பேட்டி:

வன்னியர் கல்வி அறக்கட்டளையை ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என பெயர் மாற்றம் செய்து கொண்டார். இது வன்னியர் சொத்து ஆயிற்றே. ஏன் இப்படி பெயர் மாற்றம் செய்தீர்கள் என்று கேட்டேன். இதில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் 

என்னுடையதே என்றார்.இது ஒரு 420. ஊமை ஜனங்கள் எல்லாம் இந்த விஷயத்தில் ஊமையாகி விட்டனர். இதுமட்டுமல்ல. 

ஓநாய் அழுகிறது

இட ஒதுக்கீடு போராட்டத்தில் செத்துப்போன 25 பேர் குடும்பத்தில் யாரையாவது படிக்க வைத்தாரா? இல்லை. யாருக்கும் ஒரு பைசா கூட கொடுக்க வில்லை. 

இட ஒதுக்கீடு போராளிகளுக்கு 1500 ரூபாய் பென்ஷன் 3000 ரூபாயாக உயர்த்தி யது கலைஞர் தான். இப்போது ஊமை ஜனங்களுக்காக போராடப் போவதாக ராமதாஸ் சொல்வது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை தான். இந்த குடு குடு வயசுல கிடு கிடு போராட்டம் என்றால், யாரும் இவர் பின்னால் வர மாட்டாங்க. போகவும் மாட்டாங்க. 

  முதல் வரைப் பார்த்து இட ஒதுக்கீடு கேட்பதற்கே அவமானமாக இருக்கிறதே என்கிறார். சமுதாய அமைப்பு நடத்துகிறார், சமுதாயத்துக்காக பாடுபடுவது அவமானமா? என் பின்னால் யாரும் வரலையே என்கிறார். இவ்வளவு தூரம் ஏமாற்றியவர் பின்னால் யார் வருவார்கள்? ராமதாஸ் பற்றி எல்லாருக்கும் தெரிந்து விட்டது. இருக்கிறவர்கள் எல்லாம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். போனவர்கள் யாரும் வரவில்லை. இருப்பதை காட்டிக்கொள்ளவே இப்படி பேசுகிறார். 

 அன்புமணிக்காக யார் காலில் விழுந்து எம். பி. ஆக்கி, மந்திரி ஆக்கினார்? கருணாநிதி தான் அதைச் செய்தார். இப்போது அரசியல் மனமாச்சரியத்துக்காக கருணாநிதியை குறை சொல்லக்கூடாது. 25 தியாகிகளுக்கு 

மணிமண்டபம் கேட்டோம். பணிகள் முடிந்து அடுத்த மாதம் திறக்கப் போகிறார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு அரசு வேலை கேட்டோம். இதை எல்லாம் ராமதாஸ் கேட்கவில்லை. வன்னியர்களுக்காக எதையும் அவர் கேட்கமாட்டார். பையனுக்காக மட்டுமே ராமதாஸ் கேட்பார். அதனால் தான் ஊருக்கு எல்லாம் உதார் விட்டுட்டு 

இருக்கிற ராமதாஸை ஓரம் கட்டி வைத்து விட்டார் முதல்வர். மத்திய அரசிடம் போய் வாங்கிக் கொள் என்று கூறி விட்டார். ராமதாஸ் மீது உள்ள கோபத்தில், ராமதாஸ் பின்னால் தான் வன்னியர் சமுதாயம் இருக்கிறது என தப்பாக 

எண்ண வேண்டாம். எங்கள் வயிற்றில் பால்வார்ப்பது போல நியாயமாக எங்களுக்கு கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்குங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.

 இவ்வாறு அவர் கூறினார்.

++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க