tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33), பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிநயா 30 சென்னையில் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

விசாரணையின் போது அவர் தனது கணவருடன் வாழ விரும்பவில்லை. எனவே திருமணத்தின் போது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கிக் கொள்ளுமாறு விசாரணை அதிகாரியிடம் அபிநயா கூறியதாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் கீதா, அபிநயாவின் நகைகளை கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு ராஜேஷிடம் கூறியதையடுத்து, ஒரு மாதத்திற்கு முன்பு 95 பவுன் நகைகளை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் ராஜேஷ் கொடுத்துள்ளார். ஆனால் ஆய்வாளர் கீதா அபிநயாவுக்கு நகைகளை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நகையை தராமல் ஏமாற்றுவதாக அபிநயா குடும்பத்தினர் ராஜேஷ் குடும்பத்தினரிடம் வாக்குவாதம் செய்தது தெரியவந்துள்ளது. தன்னிடம் நகை இல்லை என்றும், ஒரு மாதத்திற்கு முன்பு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் ஒப்படைத்ததாகவும் ராஜேஷ் கூறினார். பெண் வீட்டார் வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த ராஜேஷ், இன்ஸ்பெக்டர் கீதாவிடம் நகைகளை அவர்களிடம் கொடுக்குமாறு கூறியதாகவும், இன்ஸ்பெக்டர் கீதா நகைகளை யாரிடமும் கொடுக்க முடியாது என எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ், சம்பவம் குறித்து திருமங்கலம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து வந்த புகார் தொடர்பாக, டிஎஸ்பி அலுவலகம் இன்ஸ்பெக்டரிடம் நடத்திய விசாரணையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, தனியார் நிதி நிறுவனத்தில் அனைத்து நகைகளையும் ரூ.43 லட்சத்துக்கு அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆய்வாளர் கீதா நகையை திருப்பித் தர கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த 20 பவுன் நகைகளை மட்டும் கீதா திருப்பி கொடுத்துள்ளார். மீதம் உள்ள 75 பவுன் நகையை திருப்பி தர தாமதமானதால், சம்பவம் குறித்து டிஐஜி அலுவலகத்தில் நேரடியாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இதை விசாரித்த மதுரை சரக டி.ஐ.ஜி., ரம்யாபாரதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக நகைகளை திருப்பிக் கேட்ட பெண்ணின் நகைகளை திருப்பிக் கொடுக்க வேண்டிய காவல் ஆய்வாளர், அவரிடம் ஒப்படைத்த நகைகளை அடகு வைத்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் கீதாவின் கணவர் சரவணன் மதுரை திருநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க