tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மயிலாடுதுறை, செப். 1– 

திமுக கரை வேட்டி கட்டிய சேகர்பாபுவை காவி வேட்டி கட்ட வைத்தது முத்தமிழ் முருகன் மாநாடு. கோவில் குத்தகை பணம் வசூலிக்க அமைச்சர் சேகர்பாபு சாட்டையை சுழள்ளவேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறினார்.

 தரங்கம்பாடி, பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் கலந்துகொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியது: 

 பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு எனக்கு அழைத்தவர் தினாமுனா கட்சியைச் சேர்ந்தவர். தினாமுனா கட்சியில் இருந்தால் கரை வேட்டிதான் கட்டவேண்டும். இதுவரை இருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர்கள் எல்லாம் கரை வேட்டி கட்டி தான் பார்த்திருப்போம். ஆனால், அவர் எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டிவிட்டார். கரை வேட்டி கட்டிய அமைச்சர் சேகர்பாபுவை காவி வேட்டி கட்ட வைத்தது முத்தமிழ் முருகன் மாநாடு. 

 தருமை ஆதீனத்தில் தான் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடியுள்ளனர். மகாவித்துவான் தண்டபானி தேசிகர்தான் கருணாநிதியின் ஆசான். அவர் வந்த உடனே கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார். அவர்தான் கருணாநிதியை உருவாக்கினார். தருமை ஆதீனம் ஒரு சம்பிரதாயம் கருதிதான் பல்லக்கில் ஏறுகிறார். எங்கள் ஆதீனம் நடக்கவும் செய்வார். பல்லக்கு ஒரு பொருட்டல்ல, அதை அமைச்சர் புரிந்து கொள்வார். இந்த கோயிலுக்கு குத்தகைதாரர்கள் அதிகம் உள்ளனர். கோயில் குத்தகையை கேட்டால் குத்துவதற்கு கைதான் வருகிறது. கோயில் குத்தகை வழங்காதவர்களிடம் வசூல் செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எனவே, அமைச்சர் சட்டம் என்னும் சாட்டையை எடுத்து சுழற்றி, யாராக இருந்தாலும், எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களிடமிருந்து கோயில் வழிபாட்டுக்குரிய குத்தகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தால் சேகர்பாபு நம் பாபுவாக இருப்பார்.

இவ்வாறு ஆதீனம் கூறினார்.

+++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க