tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நீலகிரி மாவட்டம் உபதலை அரசு மேனிலைப்பள்ளியில் மேனிலை, இடைநிலை பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா இன்று நடைபெற்றது.பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரொக்க பரிசாக ரூ. 36,000 வழங்கப்பட்டது. பரிசுகளை உபதலை அரசு மேனிலைப் பள்ளியில் படித்து துபாயில் பொறியாளராக பணிபுரியும் மணிகண்டன் வழங்கினார். பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவன் பிராங்கிளின்- க்கு ரூ 10,000 முதல் பரிசாகவும்,மாணவன் அஸ்வினுக்கு ரூ 5000 இரண்டாம் பரிசாகவும்,மாணவன் முத்தஸீர்க்கு ரூ.3000 மூன்றாம் பரிசாகவும் வழங்கப்பட்டது. அதேபோல் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் அபிஷேக் ரூ.10,000 முதல் பரிசாகவும், இரண்டாம் மதிப்பெண் எடுத்த மாணவன் கார்த்திக்குக்கு ரூ.5000 இரண்டாம் பரிசாகவும்,மூன்றாம் மதிப்பெண் எடுத்த மாணவன் ஜீவாவுக்கு 

ரூ 3000 மூன்றாம் பரிசாகவும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மாணவர் மணிகண்டன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றும்போது "நான் உபதலை அரசு பள்ளியில் பயின்று ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் இன்று சிறந்த பொறியாளராக விளங்குகிறேன். அதேபோல் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் படி வாழ்க்கையில் சிறந்த வர்களாக விளங்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஐயறின் ரெஜி மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். விழாவில் மணிகண்டன் பெற்றோர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். பரிசினை வழங்கிய முன்னாள் மாணவர் மணிகண்டன் ஆசிரியர்கள் பள்ளியின் சார்பாக நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்தனர்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க