tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நாகர்கோவில், நவ.15–
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி கூண்டு பாலம் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது. வரும் டிச.௩௧ மற்றும் ஜன.௧ம் தேதி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தில் கண்ணாடி பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அப்போது குமரி மாவட்டத்துக்கு முக்கியமான திட்டங்களை முதல்வர் அறிவிப்பார் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசுநேற்று  கன்னியாகுமரி வந்தார். குமரி கடலில்  திருவள்ளூர் சிலை விவேகானந்தர் மண்டபம் இடையே நடைபெற்று வரும் பாலப் பணிகளை நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
    கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவருக்கு வானளாவிய சிலை அமைத்து வள்ளுவருக்கு  பெருமை சேர்த்துள்ளார் மறைந்த முன்னாள்முதல்வர் கருணாநிதி. அந்த சிலை நிறுவிய வெள்ளி விழா கொண்டாட்ட அறிவிப்பை நமது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்த விழா திருவள்ளுவருக்கு சிறப்பு செய்யும் விழாவாகவும், இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யும் விழாவாகவும் அமையும்.
கண்ணாடி கூண்டு பாலம்
மேலும் திருவள்ளுவர் சிலை மற்றும் அருகில் உள்ள விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் அமைக்கும் முயற்சியை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. அந்த பாலத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். 
இந்த வேலைகளை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரடியாக கவனித்து துரிதப்படுத்தி வருகிறார். இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் நானும் பார்வையிட்டுள்ளேன். பணிகள் குறித்த காலத்தில் இலக்கை எட்டும் வகையில் நடக்கிறது. நாம் எதிர்பார்த்தபடி பணி சிறப்பாக நடக்கின்றன.
வெள்ளி விழா தொடர்பான பல்வேறு முடிவுகள் விரைவில் முதல்வரால் அறிவிக்கப்படும். அப்போது இந்த விழாவில் கலந்துகொள்ளும் முக்கிய நபர்கள் யார், என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கும் போன்றவை நமக்கு தெரியவரும்.
விரைவில் பணி முடியும்
முதல்வர் வரும் டிச.௩௧ மற்றும் ஜன.௧ம் தேதி இங்கு வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதற்கு முன் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். எப்போது எந்த பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்பதை குறித்துள்ளோம். இப்போது நடக்கும் பணிகள் நாம் குறித்த இலக்கை எட்டும் வகையில் உள்ளது. 
முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் வானளாவிய சிலை அமைத்தது உள்பட பல்வேறு சிறப்புகள் செய்தார். அதன்தொடர்ச்சியாக தற்போது இருக்கும் அரசும் திருவள்ளுவருக்கு சிறப்பு செய்யும் வகையில் செயல்படுகிறது. 
இதன் திறப்பு விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு புதிய சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் அறிவிக்க உள்ளார்.தேர்தல் அறிக்கையில் கூறிய சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுவதை பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க