tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நாகர்கோவில், செப். 21–

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் இருப்பதால், குமரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நிபா வைரஸ் பரவல் குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம். காய்சல், சளி அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சோதனை செய்யும்படி சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

  கேரள– குமரி எல்லையான களியக்காவிளை சோதனைச்சாவடியில், சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை சார்பில் நிபா வைரஸ் பரவல் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

நேரில் ஆய்வு

  களியக்காவிளை சோதனை சாவடியில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நேற்று கலெக்டர் அழகுமீனா மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை இயக்குநர் செல்வ வினாயகம் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கேரளாவிலிருந்து வாகனங்களில் வரும் நபர்களை மருத்துவ அலுவலர்கள் பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டனர். 

பின்னர் இயக்குநர் செல்வ வினாயகம் கூறியதாவது: 

கடந்த இரண்டு தினங்களில் கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளை சோதனை சாவடி வழியாக 392 வாகனங்களில் வந்த 1043 பேருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் நிபா வைரஸ் தொற்று பரவவில்லை. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு நிபா வைரஸ் குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறையினர் மூலம் பன்றிப்பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ள இணை இயக்குநர் கால்நடைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பீதி வேண்டாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட ஆட்சித்தலைவரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் நிபா வைரஸ் குறித்து பீதியடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக பாதிப்புக்குள்ளாகிய நாடுகளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் தங்களுக்கு காய்ச்சல் போன்ற நோய் தொற்று அறிகுறிகள் தென்படின் தொடர்ந்து 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பின் பொதுமக்கள் உடனடியாக அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு இயக்குநர் செல்வ வினாயகம் கூறினார்.  

 

box

நிபா வைரஸ் அறிகுறிகள்

 

குரங்கம்மை, நிபா வைரஸ் இரண்டு நோய் குறித்து சோதனை சாவடிகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காய்ச்சல் இருப்பின் அவர்களுக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு வருகிறது. நிபா வைரஸனாது பழந்தின்னி வவ்வால்கள், பன்றிகள் மூலமாக பரவுகிறது. நிபா வைரஸ் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, இருமல், சளி, உடல் வலி உள்ளிட்டவைகளாகும்.

 இதுபோன்ற அறிகுறிகள் தென்படின் உடனடியாக அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குநர் கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க