tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 21–

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுகவுக்கு டெபாசிட் போய் விட்டதே.நமது ஏஜன்டுகள் கூட ஓட்டு போடலியா என்று நிர்வாகிகளிடம் பழனிசாமி கேள்வி விடுத்தார்.

 

கன்னியாகுமரி பார்லி. தொகுதியில் அதிமுக டெபாசிட் பறிபோனது. அத்துடன் நடந்த விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியை விட, குறைவான ஓட்டுகளே அதிமுக பெற்றது. இந்த நிலையில்இது குறித்து குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன், பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்தி னார். அப்போது நிர்வாகிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டினர். அவர்களை சமரசம் செய்வதே பழனிசாமி மற்றும் முன்னணியினருக்கு பெரிய வேலையாகி விட்டது. ஒன்றுபட்டு உழைத்து சட்டசபைத் தேர்தலில் வெற்றி தேடித் தாருங்கள் என்று பழனிசாமி அறிவுரை கூறினார்.

 

கூட்டத்தில் நடந்தது குறித்து, குமரி மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:

 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியை விட குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளோம். விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும், நாம் தமிழர் கட்சிகளை விட குறைவான ஓட்டுக்களே கிடைத்துள்ளன. விளவங்கோடு தொகுதியில், ஒரு ஓட்டுச்சாவடியில் அ.தி.மு.க.,வுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. அந்த ஓட்டுச்சாவடியில் இருந்த கட்சி முகவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா என, பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

 அப்போது, ஒரு தரப்பினர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக, புகார் தெரிவித்தனர்.

மேலும் மாவட்டச்செயலர்கள் குறித்து குற்றச்சாட்டுகளை கூறத் துவங்கியதும், அவர்களை பழனிசாமி தடுத்து விட்டார். கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை, மோடியா, ராகுலா என்ற போட்டி ஏற்பட்டதால், மக்கள் இரு கட்சிக்கும் ஓட்டளித்துள்ளனர் எனக் கூறி, மாவட்டச்செயலர்கள் சமாளித்து விட்டனர். 

 

இவ்வாறு அவர்கள் கூறினர்.+

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க