tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புது­டெல்லி, மே 14­–

முதல்வர் கெஜ்­ரி­வா­லை சந்­திக்கச் சென்­ற­போது, அவ­ரது உத­வி­யாளர் தாக்­கினார் என்று ஆம் ஆத்மி கட்­சியின் பெண் எம்.பி. திடீ­ரென புகார் செய்­துள்­ளார்.

 டெல்­லியில் ஆம் ஆத்மி கட்­சியின் தலைவர் கெஜ்­ரிவால் தலை­­மையில் ஆட்சி நடக்­கி­றது. இந்த ஆட்­சிக்கு மத்­திய அரசு தொடர்ந்து ஏதா­வது ஒரு ரூபத்தில் தொல்லை கொடுத்து வரு­வ­தாக ஆம் ஆத்மி கட்­சி­யினர் குற்றம் சாட்டி வரு­கின்­றனர். இதன் தொடர்ச்­சி­யாக முதல்வர் கெஜ்­ரி­வா­லை அம­லாக்­கத்­துறை மூலம் கைது செய்து திகார் சிறையில் அடைத்­த­னர். பின்னர் உச்­ச­நீ­தி­மன்றம் இடைக்­கால ஜாமீன் வழங்­கி­ய­தால் கெஜ்­ரிவால் வெளியே வந்து பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டுள்ளார். தொடர்ந்து அவர் மத்­திய அரசை கடு­மை­யாகச் சாடி வரு­கி­றார்.

 இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்­சியின் ராஜ்­ய­சபா உறுப்­பி­ன­ரான ஸ்வாதி மாலிவால் திடீ­­ரென முதல்­வரின் வீட்டில் தாக்­கப்­பட்­ட­தா­க நேற்று திடீ­ரென கூறினார். டெல்லி சிவில்லைன்ஸ் போலீஸ்­நி­லை­யத்­துக்கு நேற்று சென்ற ஸ்வாதி மாலி­வால், "முதல்வர் கெஜ்­ரி­வாலை அவ­ரது வீட்டில் சந்­திக்கச் சென்­றேன். அப்போது. அவ­ரது உத­வி­யாளர் பிபவ் குமார் என்­பவர் என்னை தாக்­கி­னார் என்று கூறினார். ஆனால் முறைப்­படி எந்தப் புகாரும் தெரி­விக்­க­வில்லை. பின்னர் தரு­வ­தாக கூறிச் சென்று விட்­ட­தாக துணை கமி­ஷனர் மீனா கூறினார்.

  இது பற்றி மாலி­வாலிடம் விவ­ரங்கள் அறிய செய்­தி­யாளர்கள் முயன்­றனர். ஆனால் எந்தப் பதிலும் கிடைக்­க­வில்லை. முதல்வர் அலு­வ­ல­க­மோ ஆம் ஆத்மி கட்­சியோ எந்த விளக்­கமும் அளிக்­க­வில்­லை. இது பற்றி விசா­ரிக்க முதல்வர் வீட்­டுக்கு சிவில்லைன்ஸ் போலீசார் சென்­றனர். இது­பற்றி விசா­ரணை நடத்த வேண்டும் என்று டெல்லி பா.ஜ. தலைவர் வீரேந்­திர சச்­தேவா கூறினார். எந்த ஒரு பெண்ணுக்கு இப்­படி நேர்ந்­தாலும் அது பற்றி விசா­ரித்து நீதி வழங்­க­வேண்டும் என்­றார். இது பற்றி விசா­ரித்து 3 நாளில் அறிக்கை தரும்­படி டெல்லி போலீ­சுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்­த­ர­விட்­டுள்­ள­து.

++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க