tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 13

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. முதல்வராக நீடிக்க வேண்டுமா என்பது கெஜ்ரிவாலின் விருப்பம்.ஆனால் அலுவலகம் செல்லக்கூடாது.கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. 

 மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதனால் அவரால் முழுமையாக மக்களவைத் தேர்தல் களத்தில் பிரசாரம் செய்ய முடியவில்லை.பின்னர் இடைக்கால ஜாமீனில் கெஜ்ரிவால் வெளியே வந்து பிரசாரம் செய்தார். தேர்தல் முடிவுக்கு முன்பாகவே அவர் மீண்டும்சிறைக்கு சென்றார். இந்தநிலையில்ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் விசாரித்தனர். சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது கவலை அளிக்கிறது. ஒருவரை கைது செய்தால் மட்டுமே விசாரணை நடத்த முடியும் என தொடர்ந்து கூறுவதை ஏற்க முடியாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வராக இருக்கக் கூடிய அரவிந்த் கெஜ்ரிவால், 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார். எனவே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறோம். இந்த வழக்கு தொடர்பாக அவர் எந்த அறிக்கையும் வெ ளியிடக்கூடாது. ஆனால் அவர் அலுவலகம் அல்லது தலைமைச் செயலகம் செல்லக்கூடாது. கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது.அவரசமான கோப்பில் கையெழுத்திடவேண்டும்என்றால் டெல்லி துணை நிலை ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.முதல்வராக நீடிக்கவேண்டுமா... வேண்டாமா என்பது கெஜ்ரிவாலின் விருப்பம் என்று நீதிபதிகள் உத்தர விட்டனர்.

 சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலின் காவல் 25ம்தேதி வரை இருப்பதால், இப்போது அவர் வெ ளியே வர முடியாது.

சர்க்கஸ் அல்ல

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக் கூறுகையில் “இந்த வழக்கு உங்களால் உருவாக்கப்பட்ட சர்க்கஸ் அல்ல என்பதை பா.ஜ.-விடம் கூற விரும்புகிறேன். நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் தேசத்திற்கு ஒரு விஷயத்தை மட்டுமே பங்களித்துள்ளனர். அரசியல் ரீதியாக எதிர்கொண்டு தோற்கடிக்க முடியாத எந்தத் தலைவரையும் மோசடியாகவும் தவறாகவும் கைது செய்யும் சர்வாதிகார அமைப்பாகி விட்டனர். இந்த வகையிலிருந்து நாம் முன்னேற வேண்டும். அரசியல்... நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்... இந்த கேடுகெட்ட அரசியலில் இருந்து விலகி நேர்மறையான அரசியலை செய்ய பிரதமரையும், அமித்ஷாவையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

ஆம் ஆத்மி தலைவர் அதிஷி கூறுகையில், “உண்மையைக் குழப்பலாம், ஆனால், தோற்கடிக்க முடியாது. இன்று, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இந்த ஜாமீன், அரவிந்த் கெஜ்ரிவால் உண்மையுடன் இருந்தவர், உண்மையுடன் இருக்கிறார், உண்மையுடன் தொடருவார் என்பதை ஒட்டுமொத்த தேசத்தின் முன் நிரூபித்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க