tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஆக.7 –

டெல்லி ஆம் ஆத்மி அரசின் மது பான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்குகளில், முன்னர் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா மீது குற்றம் சுமத்தி கைது செய்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிசோடியா, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தார். நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு இதை விசாரித்து வருகிறது. ஜாமீன் மனுவை எதிர்த்து இ.டி. தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிட்டார். 

 அவரிடம் நீதிபதி விஸ்வநாதன், ‘‘மது நிறுவனங்களுக்கு, பழைய மது கொள்கையில் 5 சதவீதமாக இருந்து வந்த லாப சதவீதத்தை, புதிய மது கொள்கையில் 12 சதவீதமாக அதிகரித்துள்ளனர். அது, அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்ட கொள்கை முடிவு என்று அவர்கள் வாதிடுகிறார்கள். நீங்கள், அது கிரிமினல் குற்றம் என்று வாதிடுகிறீர்கள். அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் வழக்கு தொடர்ந்தால், அமைச்சரவை எப்படி செயல்பட முடியும்? என்றெல்லாம் கேள்வி வருகிறது. இந்த வழக்கு பிரச்னையை மறந்து விடுங்கள். பொதுவாகப் பரிசீலிப்போம். கொள்கை முடிவுக்கும் கிரிமினல் குற்றத்துக்கும் எல்லைக்கோடு என்ன? ஒரு கொள்கை முடிவை கிரிமினல் குற்றத்துக்கான அடித்தளம் என்று எப்படி தீர்மானிப்பது?’’ என்று கேள்வி எழுப்பினார்.

எஸ்.வி. ராஜு பதிலளிக்கையில், ‘‘ஒரு கொள்கை முடிவு தீர்மானிக்கப்படும் சூழல், அதன் நோக்கம், அதன் அவசியம், அதில் தாக்கம் செலுத்தியது யார் யார் என பல அம்சங்களையும் விரிவாகப் பரிசீலித்தால்தான், இது சரியான கொள்கை முடிவு, இது முறைகேடுகளை செயல்படுத்தும் கிரிமினல் குற்றத்துக்கான அடித்தளம் என்று எல்லைக்கோட்டை வரையறை செய்ய முடியும்’’ என்று விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து வாதிட்ட அவர், ‘‘டெல்லி அரசின் புதிய மது கொள்கை சார்ந்த பல அம்சங்களையும் பரிசீலித்துதான், அது லஞ்ச ஊழலுக்கான கிரிமினல் குற்றத்துக்கான அடித்தளம் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 5 சதவீத லாபத்தை 12 சதவீதமாக அதிகரித்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அந்த அதிகரிப்பு, என்ன நோக்கத்தில், யார் யாரால் தீர்மானிக்கப்பட்டது? அந்த அதிகரிப்பால் லாபம் அடைந்தவர்கள் யார்? மது விற்பனை உரிமம் பெறுவதற்காக, யார், யார் மூலம் பேரம் பேசி, யாருக்கு எவ்வளவு லஞ்சம் அளித்தனர்? அந்த லஞ்சத்தொகை கைமாற்றப்பட்ட சட்டவிரோத முறைகள் என்னென்ன? ஆகியவை உள்ளிட்ட பல கேள்விகளை உருவாக்கி, அவை குறித்து விரிவான புலனாய்வு நடத்தி, அவற்றுக்கு பதில் கண்டுபிடித்து, குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு, அதற்கான ஆதாரங்களையும் திரட்டியிருக்கிறோம். இந்த முறைகேட்டு சங்கிலியில், மணிஷ் சிசோடியா ஒரு மிக முக்கிய இணைப்பாக இருக்கிறார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்குவது, வழக்கை சீர்குலைக்கும்’’ என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க