tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருமயம் ஆகஸ்ட் 15___

திருமயம் அருகே ராராபுரத்தில் திருவேட்டழகர் கோயில் உள்ளது. இங்கு ஆடித்திருவிழா நடந்தது. அதில் நடிகர்கள் அர்ஜுன், தம்பி ராமையா ஆகியோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

 ராராபுரத்தில் திருவேட்டழகர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர், இடைய கருப்பர், பைரவர் ஆகிய கோயில் கள் உள்ளன. இக்கோயில்களில் ஆடித்திருவிழா கடந்த10 நாட்களாக நடைபெற்றது. விழா

கடந்த 5ம் தேதி காப்பு கட்டும் வைபவத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி சிறப்பு, அபிஷேக ஆராதனைகள்,சுவாமி வீதி உலா நடைபெற்றது நேற்று 9ம் திருவிழாவை முன்னிட்டு திருவேட்டழகர், கருப்பர் கோயிலில் காலை முதலே சிறப்பு வழிபாடு நடந்தது. அதில் வழிபட ராராபுரத்தைச்சேர்ந்த நசைச்சுவை நடிகர் தம்பி ராமையா குடும்பத்தினர், நடிகர் அர்ஜுன் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவர்கள் சுவாமி சன்னதியில் பயபக்தியுடன் வழிபட்டனர். முன்னதாக நடிகர்கள் அர்ஜுன், தம்பி ராமையா ஆகியோருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள அரசு பள்ளி மாணவர்களுடன் நடிகர்கள் அர்ஜுன், தம்பி ராமையா ஆகியோர் கலந்துரையாடினர். நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர மகேஸ்வரன் தலைமை வகித்தார். அப்போது மாணவர்களுக்கு திருக்குறளில் தெரிவிக்கப்பட்ட நல்ல கருத்துக்களை தம்பி ராமையா எடுத்துக் கூறினார். "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண  

நன்னயம் செய்து விடல்" என்ற குறளையும் அதன் பொருளையும் கூறி அதற்கேற்ப" உங்களுக்கு யாராவது தீமை செய்திருந்தால் அவர் வெட்கப்படும் அளவிற்கு நல்ல காரியங்கள் செய்து அனைவரிடமும் நட்பாக இருக்க வேண்டும்.இது வள்ளுவர் கூறியது. அதனை நாமும் வாழ்வில் பின்பற்றவேண்டும் . நிறைய படிக்கணும் படிப்பதற்கு எல்லை கிடையாது. ஒவ்வொருவரிடமும் ஒரு திறன் உள்ளது. அதனை ஆசிரிய பெருமக்கள் கண்டறிந்து நிறைய பயிற்சி அளித்து அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்றார். ஊராட்சி தலைவர் முருகேசன், குமார்,அரசு ஒப்பந்தக்காரர் அய்யாச்சாமி ,தலைமையாசிரியர் பத்மா மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

ராராபுரம் அரசு பள்ளியில் மாணவர்களுடன் நடிகர்கள் அர்ஜுன், தம்பி ராமையா ஆகியோர் கலந்துரையாடினர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க