tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 17-–

 

கோல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதைக் கண்டிக்காமல்,காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட, இண்டியா கூட்டணி கட்சிகள் மவுனம் சாதிப்பதாக, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன், தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

 

அவர்கள் அளித்த பேட்டி:

 

சில மாதங்களுக்கு முன், மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள் நாட்டையே உலுக்கின. கடந்த 9ம் தேதி கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பெண் பயிற்சி டாக்டர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

 

ஆனால், மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், பயிற்சி டாக்டரின் பெற்றோருக்கு போன் செய்து, மகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளது. கோல்கட்டா உயர் நீதிமன்றம் தலையிட்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றிய பின், பாலியல் வன்கொடுமைகள் நடந்த மருத்துவக் கல்லுாரி கருத்தரங்கக் கூடத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் காவல் துறை, சுகாதாரத் துறைக்கும் அமைச்சராக இருக்கிறார். எனவே, பெண் பயிற்சி டாக்டருக்கு நடந்த கொடூரத்திற்கு பொறுப்பேற்று, மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்; இனியும் முதல்வராக தொடர, அவருக்கு உரிமையில்லை.

 

பெண் டாக்டருக்கு நடந்த கொடூரத்தைக் கண்டிக்காமல், இண்டி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் சிறு சம்பவங்கள் நடந்தாலும் கொந்தளிக்கும் ராகுல், பிரியங்கா, கனிமொழி, சுப்ரியா சுலே போன்றவர்கள், இப்போது என்ன செய்கின்றனர்? 

 

கோல்கட்டா கொடூரத்திற்கு எதிராக, முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும். மம்தா பானர்ஜியை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும். 

 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க