tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோயம்புத்தூர், ஆக. 7–

கோயம்புத்தூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து நேற்று புதிய மேயர் தேர்தல் நடந்தது. மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகியை திமுக தலைமை அறிவித்தது. அதன்படிநேற்று காலை 10 மணி அளவில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் அனைவரும் தேர்தல் நடைபெறும் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்தனர்.  

காலை 10:30 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது. திமுக வேட்பாளர் ரங்கநாயகி மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. எனவே கோவை மாநகராட்சி மேயராக போட்டியின்றி ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான சான்றிதழை, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகியிடம் வழங்கினார். மேயருக்கு சக கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

தொடர்ந்து மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் வந்தனர். அமைச்சர்கள் முன்னிலையில் மேயர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதன்பின் அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கே.என்.நேரு ஆகியோர் ரங்கநாயகியை மேயருக்கான இருக்கையில் அமர வைத்து செங்கோலை வழங்கினர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரெங்கநாயகி," இப்போது தான் பொறுப்பு ஏற்றுள்ளேன். எனக்கு எனது வார்டை பற்றி தான் தெரியும். இனி அனைவருடனும் கலந்து ஆலோசித்து எது அவசியம், எது அவசரம் என்பதை கேட்டு செயல்படுவேன்" என்றார். 

முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்,"கோவை மாநகராட்சியில் புதிதாக மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணிகளுக்கு உறுதுணையாக இருப்போம். கோவை மாநகராட்சிக்கு நிறைய பணிகளை செய்ய வேண்டும் என முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். சாலை, குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவோம். மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது பகுதிகளுக்கு தேவையான திட்டங்களை கேட்டுள்ளார்கள். அதையும் நிறைவேற்ற பாடுபடுவோம். சிறுவாணி மற்றும் ஆழியார் அணை பிரச்னைகள் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்றார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க