tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோவை, ஜூலை 23–

 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே ஐந்தாவதுகியரில் பா.ஜ.செல்ல வேண்டும்’’ என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

 கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நேற்று , தன்னார்வலர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார். இதில்அண்ணாமலை பேசியதாவது:

 ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயகம் பரீட்சை வைத்துக் கொண்டே இருக்கும்; ‘பாஸ்’ பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். 

சங்கடப்பட ஏதுமில்லை.

 அரசியல்வாதியாக கடந்த மூன்றாண்டுகள் கஷ்டமான காலம்; கஷ்டப்பட்டு தலைவர் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். இந்த அரசியலில் நாம் இருக்க வேண்டுமா என பலமுறை யோசித்திருக்கிறேன். அரசியலில் தொடர, பல விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

 

சாதாரண மனிதனை போல் எடுத்தெறிந்து பேச முடியாது; ‘கமென்ட்’ சொல்ல முடியாது; நம்மை தவறாக சித்தரிக்கின்றனர் என்றால் கூட பொறுத்துக் கொள்ள வேண்டும். அபாண்டமான குற்றச்சாட்டு வந்தாலும், ‘ரியாக்ட்’ செய்யக் கூடாது. நீங்கள் சார்ந்துள்ள கட்சிக்குள் வேறு யாரும் அபத்தமாக கருத்து சொன்னாலும், அதையும் கேட்டுக் கொள்ள வேண்டும். 

கட்சியில் சேர்ந்தால், ‘ரியல் எஸ்டேட் பிசினஸ்’ செய்யலாம்; கமிஷன் கொடுப்பர் என்பதெல்லாம் இல்லை. நிறைய பேர் தங்களது சொத்தை இழந்து, கட்சிக்கு செலவழித்து இருக்கின்றனர். 

 

பிரதமரை பாருங்கள்

 கோவையில் தோல்வி என நினைக்கவில்லை. வெற்றி தள்ளிப் போய் இருக்கிறது என்று தான் எடுத்துக் கொள்கிறேன். மக்களை நேரடியாக சந்திக்கிறோம் என்ற அடிப்படையில் தேர்தலை எதிர்கொண்டோம். 4.5 லட்சம் ஓட்டுகள் பெற்றுள்ளது சாதாரண விஷயமல்ல.

ஜனநாயகத்தில் பல சமயங்களில் சோர்வு வரத்தான் செய்யும். என் செயல்பாடுகளும் கூட, உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். அரசியலில் எல்லா நேரமும் கத்தி எடுத்து சண்டை போட முடியாது. சில சமயம் கால்களை பின்னால் எடுத்து வைக்க வேண்டிய சூழல் வரும். அப்படிபட்ட சூழலில், நல்ல தலைவனாக கால்களை பின்னால் எடுத்து வைக்க வேண்டும்; சில நேரங்களில் முன்னால் எடுத்து வைக்க வேண்டும். 

எப்போதுமே ஐந்தாவது கியரில் சென்றால், கியர் பாக்ஸ் பழுதாகி விடும்; எப்போதுமே பர்ஸ்ட் கியரில் சென்றால், வண்டியே ஓடாமல் போய் விடும். தேவைப்படும் கியரில் தான் செல்ல வேண்டும். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு, இப்போதிலிருந்தே ஐந்தாவது கியரில் செல்ல வேண்டும். 

 

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

+++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க