tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, நவ. 17–
சட்டம் படித்த மாஜி மந்திரி சிவி சண்முகம் பொறுப்போடு பேச வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோலியனுாரில் 2023 செப்டம்பர் மாதம் நடந்த கண்டனக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்பியுமான சி.வி. சண்முகம் பங்கேற்று,  முதல்வர் பற்றி அவதுாறாக பேசினார் எனக் கூறப்படுகிறது.
முதல்வரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் சி.வி.சண்முகம் பேச்சு இருந்ததாகக் கூறி, சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் கோர்ட்டில் திமுக தரப்பில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதுாறு வழக்கை ரத்து செய்யக்கோரி, ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் மனுத் தாக்கல் செய்தார்.
ஐகோர்ட்டில் நீதிபதி பி. வேல்முருகன் முன்னிலையில், மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமை என்றாலும், அதில் கண்ணியம் தேவை . ஆளும்கட்சி குறித்து எச்சரிக்கையுடன், கண்ணியத்துடன் எதிர்க்கட்சியினர் பேச வேண்டும், தேர்தலின்போது வாக்குறுதிகள் அளிப்பது உலக அளவிலான நடைமுறை, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டலாம்.,
மனுதாரர் சி.வி. சண்முகம் சாதாரண நபர் அல்ல. அவர் சட்டம் படித்த முன்னாள் அமைச்சர். அவர் பொறுப்போடு பேச வேண்டும் , அந்த காலம்போல் இப்போது இல்லை, அடுத்த தலைமுறையினர் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். தலைமுறை மாறிவிட்டது, நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை .
இவ்வாறு நீதிபதி கூறினார்.
இதையடுத்து அரசு தரப்பில் வக்கீ்ல் விவேக்குமார் ஆஜராகி, 'இதுபோல் மனுதாரர் பேசியது முதல்முறை அல்ல. அவர் மீது 3 அவதுாறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அந்த வழக்குகள் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன' என்று சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, எல்லா மனுக்களையும் சேர்த்து விசாரித்து, உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறி, விசாரணையை நவம்பர் 22ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க