tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருநெல்வேலி, ஜூன் 18–

தமிழ­கத்தில் சாதி ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருகிறது. ஆணவ படுகொலை தடுப்பு சட்டத்தை தமி­ழக அரசு கொண்டு வர­வேண்­டும் என்று மா.கம்யூ. செய­லாளர் பால­கி­ருஷ்ணன் வலி­யு­றுத்­தினார். 

 

திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடத்தி வைக்கப்பட்ட சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி அலு­வ­ல­கத்தில் ஒரு கும்பல் புகுந்து தாக்­கதல் நடத்­தி­யது. இதில் நிர்வாகிகள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இது தொடர்­பாக 13 பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

இது தொடர்­பாக கட்­சியின் மாநில பொதுச் செய­லாளர் பால­கி­ருஷ்ணன் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­ய­தா­வ­து: 

  திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக சாதிவெறி செயல்கள் தொடர்கதையாகி விட்­டது. அய்யா வைகுண்டர் உள்ளிட்ட சாதி மறுப்பு தலைவர்கள் அதிகம் பிறந்த மண்ணில் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

  திருநெல்வேலியில் நடந்த சாதி மறுப்பு திருமணத்தை வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது பல்வேறு கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பிய நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு பாதுகாப்பு கேடயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பக்கபலமாக திகழும். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு உரியப் பாதுகாப்பை அளித்து அரசு வேலை வழங்க வேண்டும், அரசு பாதுகாப்பு அளிக்க தவறினால் கடைசி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். சாதி ஆணவ படுகொலைகள் அதிகரித்து வரும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு ஆணவ படுகொலையைத் தடுப்பதற்கும் மற்றும் சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைப்பதிலும் முற்போக்குடன் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆணவ படுகொலை தடுப்புச் சட்டத்தை ஏற்ற வேண்டும்.இது தொடர்­பாக 

 சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும். தமிழக முழுவதும் நடைபெறும் சாதி மறுப்பு திருமணங்கள் விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும். ஆயிரம் காலம் பின்னால் உள்ள சாதி எனும் சகதியில் மக்கள் இன்னமும் ஊறிக் கொண்டிருக்கிறார்கள். 

சாதிப் பெயரால் ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சாதி அமைப்புகள் தான் இதற்கு கார­ணம். சாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சிலர் இதுபோன்ற விவகாரத்தை அணையவிடாமல் ஊதி பெரிதாக்கி வருகின்றனர். அவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுத்து அடக்க வேண்டும்.

இவ்­வாறு அவர் கூறி­னார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க