tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஆக.1–

மக்களவையில் சாதியைப் பற்றி பா.ஜ. அமைச்சர் பேசியதை பிரதமர் பாராட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டியா கூட்டணி கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் கடந்த திங்களன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுகையில், ‘‘மத்தியில் ஐஎன்டிஐ கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வோம்’ என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், நேற்று முன்தினம் லோக்சபாவில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜ எம்பியுமான அனுராக் தாக்குர் பேசுகையில், ‘தங்கள் ஜாதி என்னவென்று தெரியாதவர்கள், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என, கூறுகிறார்கள்,’ என்றார். 

அனுராக்கின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதற்கு அனுராக் தாக்குர்,’ நான் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை. பொதுவாகதான் கூறினேன்’ என்றார்.

அப்போது சபையில் இருந்த ராகுல், ‘எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களுக்காக குரல் கொடுப்பவர்கள், போராடுபவர்கள், இத்தகைய தரகுறைவான விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அனுராக் தாக்குர் என்னை தான் தரக்குறைவாக விமர்சித்தார். அதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, நான் எதிர்பார்க்கவில்லை’ என்றார்.

அனுராக் தாக்குரின் பேச்சை பாராட்டி, பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று காலை வெளியிட்ட பதிவில், ‘‘ எங்களின் உற்சாகமிக்க இளைஞர் அனுராக் தாக்குரின் பேச்சை அனைவரும் கேட்க வேண்டும். உண்மையும் நகைச்சுவையும் கலந்து பேசியுள்ளார். ஐஎன்டிஐ கூட்டணியின் மோசமான அரசியலை வெளிப்படுத்தியுள்ளார்’ என, கூறியிருந்தார். மேலும், அனுராக் தாக்குரின் பேச்சு அடங்கிய வீடியோவை, பிரதமர் வெளியிட்டிருந்தார்.

எதிர்க்கட்சிகள் அமளி

இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியுவுடன், அனுராக் தாக்குரின் பேச்சுக்கும், அதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளதற்கும் கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். 

கேள்வி நேரம் முடிந்த பின், ஜீரோ நேரத்தில் இந்த பிரச்னையை எழுப்புங்கள்,’’ என, சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

 ‘‘யாரும் பதாகைகளை ஏந்தக் கூடாது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சபையின் விதிகளை மீற வேண்டாம்,’’ என, சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘‘ ராகுல் மற்றும் இண்டியா கூட்டணி கட்சியினர், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, கூறுவர். ஆனால்,அவர்களின் ஜாதி பற்றி கேட்டால், பிரச்னையாக்குகின்றனர். நாட்டின் கவுரவத்தையும், மதிப்பையும் சீரழிப்பதையே நோக்கமாக கொண்டு காங்கிரஸ் செயல்படுகிறது,’’ என்றார்.

சபையில் தொடர்ந்து அமளிநீடிக்கவே, பிற்பகல் 12 மணிவரை சபையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். 

இதற்கிடையே, சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்பி சரண்ஜித் சிங் சன்னி எழுதியுள்ள கடிதத்தில், ‘சபை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட அனுராக் தாக்குரின் பேச்சுகள் அடங்கிய வீடியோ சமூக வலைளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளது, சபை உரிமையை மீறிய செயல், அவர் மீது சபை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என, கேட்டுக் கொண்டுள்ளார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க