tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 6– 

‘‘விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட், இந்த தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

 கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தமிழக அரசின் இந்த முடிவுக்கு சில எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொதுநல வழக்கு

இதற்கிடையில், ரூ.௧௦லட்சம் இழப்பிடு எதிர்த்து ஐகோர்ட்டில் சென்னையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

மனுவில் கூறியிருப்பதாவது:

கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது. அவர்களது குடும்பத்துக்கு மாநில அரசு இரக்கம் காட்ட வேண்டியதில்லை. தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் பலியாவோருக்கு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. எனவே இழப்பீடு உத்தரவு நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது. எனவே, கள்ளச்சாராயம் குடிப்பவர்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட வேண்டும். அவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக்கூடாது. விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் உத்தரவு

இந்த வழக்கு, ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பை பார்த்து நீதிபதிகள் கூறியதாவது:

விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது மிக அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்?

இதை ஏன் ஊக்குவிக்க வேண்டும்? நீங்கள் 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறீர்கள். இதுதான் ஊக்கம். விபத்தில் ஒருவர் இறந்தால், இழப்பீடு வழங்கலாம். ஆனால், இந்த விஷயத்துக்கு இல்லை. 10 லட்சம் ரூபாய் என்பது மிக அதிகம். நீங்கள் அரசு செயலர்களுடன் பேசி, மற்றொரு வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும். 

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

10 லட்சம் ரூபாய் இழப்பீடு உத்தரவை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

கோரிக்கை நிராகரிப்பு

 இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கள்ளச்சாராய சோகம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மற்ற வழக்குகளுடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

 ஆனால் இந்தக் கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்து விட்டது. இந்த வழக்கில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை, முந்தைய வழக்குகளில் வைக்கப்பட்ட கோரிக்கையை விட வித்தியாசமானது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க