tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பெங்களூர், ஆக. 21–

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் மீது ஊழல் வழக்கு தொடுக்கலாம் என்று கவர்னர் உத்தரவை அடுத்து சித்தராமையா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு முடியும்வரை, சித்தராமையா மீது சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த ஐகோர்ட் இடைக்காலத் தடைவிதித்தது. 

*முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அந்த நிலத்துக்கு மாற்றாக மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (முடா) 14 பிளாட்டுகள் ஒதுக்கியது. 

ஒரு நபர் கமிஷன்

மிகவும் முக்கியமான இடத்தில் அதாவது நில மதிப்பு அதிகமாக உள்ள மைசூர் விஜயநகர் பகுதியில் பார்வதிக்கு மனைகள் ஒதுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன . மேலும், ‘முடா’ முறைகேட்டில் ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

முடா முறைகேட்டை விசாரிக்க ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பி.என். தேசாய் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை கர்நாடகா காங்கிரஸ் அரசு கடந்த ஜூலை 14ம் தேதி நியமித்துள்ளது.

எனினும், இந்த விவகாரத்தில் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜவும், அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளமும் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் முதல், பாதயாத்திரை வரை பல போராட்டங்களை நடத்தின./கவர்னர் அனுமதி

 இந்த முறைகேடு தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கர்நாடகா கவர்னர் தாவர் சந்த் கெலாட்டிடம் சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் மனு அளித்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில், சித்தராமையாவுக்கு கடந்த ஜூலை 27ம் தேதி, கர்நாடகா கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசில்,‘‘உங்களுக்கு எதிராக வழக்கு தொடர ஏன் அனுமதி அளிக்க கூடாது. இதுதொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும்’’என்று கவர்னர் கேட்டிருந்தார்.  

எனினும், இந்த பிரச்னை தொடர்பாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தலைமையில் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் கூடி, நோட்டீசை கவர்னர் திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. 

இதைத்தொடர்ந்து, சித்தராமையா மீது வழக்கு தொடர பிரதீப் குமார், சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோரும் கவர்னரிடம் மனு அளித்தனர்.

தனிகோர்ட் பட்டியல்

இந்நிலையில், சித்தராமையா மீது வழக்கு தொடர அவர்களுக்கு கடந்த 17ம் தேதி கவர்னர் அனுமதி அளித்தார்.

 சித்தராமையா மீது பெங்களூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்கள் தொடர்பான சிறப்பு கோர்ட்டில் ஆபிரகாமும், சிநேகமாயி கிருஷ்ணாவும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தொடர்ந்து இருநாள் விசாரிக்க சிறப்பு கோர்ட் பட்டியலிட்டது.

 இந்நிலையில், கவர்னரின் முடிவை எதிர்த்து சித்தராமையா சார்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில்,‘‘ அரசியல் சாசனக் கோட்பாடுகளுக்கு முரணாகவும், சட்டப்பூர்வ ஆணைகளை மீறியும், உரிய முறையில் விண்ணப்பிக்காமல், இந்த அனுமதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் முடிவு சட்டத்துக்கு புறம்பானது. என் மீது வழக்குத் தொடர அனுமதிப்பது தீவிரமான மற்றும் உடனடி ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, என் மீது வழக்கு தொடர கவர்னர் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’’என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்பாக நவிசாரணைக்கு வந்தது. 

சித்தராமையா சார்பில் சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீலும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் மனு சிங்வியும், கவர்னர் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர். 

அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில்,‘‘கவர்னர் வழங்கிய அனுமதி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகா அரசை சீர்குலைக்கும் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதி. எந்தக் காரணமும் இல்லாமல் சித்தராமையா மீதான புகாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆபிரகாம் மனு அளித்த அதே நாளில் முதல்வருக்கு விளக்கம் கேட்டு கவர்னர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதன்மூலம் இந்த மனு மீது அவர் அவசரம் காட்டியது தெளிவாகிறது என்றார். 

துஷார் மேத்தா வாதிடுகையில்,‘‘அனுமதிக்கான விண்ணப்பம் எதுவும் கவர்னரிடம் நிலுவையில் இல்லை. சிறப்பு கோர்ட் விசாரணைக்கு இடைக்கால தடையுத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது’’என்றார். அதேபோல், இடைக்கால உத்தரவுக்கு புகார்தாரர்களின் மூத்த வக்கீல்களும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இடைக்கால தடை

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா இந்த விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அதுவரை முதல்வர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் சிறப்பு கோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், நீதிபதி கூறுகையில்,‘‘இந்த வழக்கு இந்த கோர்ட்டால் விசாரிக்கப்படுவதால், மனுக்கள் இன்னும் முடிக்கப்படாததால், அடுத்த விசாரணை தேதி வரை, சம்பந்தப்பட்ட கோர்ட் அதன் நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும்’’என்றார்.

**

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க