tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

கோவை, நவ.8

 கோவை கொடிசியா வளாகத்தில் சிறு, குறு தொழில்துறை சார்பில் “வாங்குவோர் விற்போர் சந்திப்பு” நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியை சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:

அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், எகிப்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள் வந்துள்ளனர். உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பையும் , நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான பங்கினையும் சிறு, குறு தொழில்கள் தருகின்றன.

 உள்நாட்டு உற்பத்தியில் 14% ஏற்றுமதியில், 19.5 சதவீதத்துடன் இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் தமிழ்நாட்டின் சிறு, குறு தொழில்துறை இருக்கிறது. தமிழகத்தில் 28 லட்சத்து 42 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் இருக்கிறது. கடத்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 63 ஆயிரத்து 573 கோடி முதலீட்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

 இந்தியாவில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதமாக இருக்கிறது. நடப்பாண்டில் வளர்ந்து வரும் துறைகளான மின்சார வாகனங்கள், மெட்ரோ கெமிக்கல் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி அதிகரித்து இருக்கிறது. இந்த ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோவை, ஓசூர் ஆகிய 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் நிறுவுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

தொழிற்பேட்டை

செலவம்பாளையம் கிராமத்தில் 18 கோடி மதிப்பீட்டில் தனியாருடன் இணைந்து தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு வருகிறது. சூலூர் அருகே அறிஞர் அண்ணா தொழிற்பேட்டைக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிச்சி தொழிற்பேட்டையில் 22 கோடி மதிப்பீட்டில் 510 தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வரும் நிலையில் விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்க இருக்கிறார். மேலும் சின்னவேடம் பட்டியில் 5 கோடி மதிப்பீட்டில் அலுமினியம் அச்சு வார்ப்பு தொழில் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

தென்னை நார் கயிறு தொழிலை மேம்படுத்த கோவையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் கயிறு குழுமம் அமைக்கும் பணி உள்ளிட்டவையும் நடைபெற்று வருகிறது. 

கோவைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக 126 கோடி மதிப்பீட்டில் தங்க நகை தயாரிப்பிற்காக ழிகிறிலி ஆங்கீகாரத்துடன் கூடிய ஆய்வகத்துடன் அடுக்குமாடி வளாகம் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 2030 ல் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்பதை நோக்கி பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

==

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க