tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, ஜூலை 16

முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் காமராஜர் சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத் தினர். பின்னர் அவர் அளித்த பேட்டி:

 பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொண்டு வந்தது எம்.ஜி.ஆர். இவர்களின் இரு பெ ரும் ஆட்சியை நிலை நாட்டியது ஜெயலலிதா. அ.தி.மு.க. ஆட்சி தான் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் டாக்டர் சரவணனுக்கு வேகாத வெயிலில்ஓட்டு கேட்டோம். ஓட்டுகேட்டதில் ஏதேனும் குறை இருந்ததா? எல்லா இடங்களில் தோல்வியை தழுவினோம். பல இடங்களில் 2-வது இடம் பெ ற்றோம். இது தொடர்பாக சென்னையில்நடந்த ஆலோசனை கூட்டத்தில்பொதுச்செயலாளர் பழனி சாமி ஆலோசனை தான் வழங்கினாரே தவிர வேறு ஒன்றும்இல்லை. 

 மதுரை அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. இப்போது தோல்வியை தழுவியது எங்களுக்கு மனஉளைச்சல் தான். மதுரையில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மோடிக்கு வாக்களித்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு ரூ.. 8000 கோடிக்கு மேல் நிதி வழங்கினோம். ஆனால் மதுரை மக்கள் ஏன் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடவில்லை என எடப்பா டி பழனிச்சாமி என்னிடம் கேட்டார்.

நாங்க என்ன காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவா ? நாங்களும் கூவி கூவித்தான் ஓட்டு கேட்டோம். வேகாத வெயிலில் சரவணனுக்காக ஓட்டு கேட்டோம். கழகத்தினர் பம்பரமாக வேலை பார்த்தனர். இதற்கு மேல் எப்படி வேலை பார்க்க முடியும்?குறிப்பிட்ட சமுதா யத்தினர் இந்தியாவை யார் ஆள வேண்டும் என்ற அடிப்படையில் மோடிக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். சிறுபான்மையினர் ராகுலை விரும்பினார்கள்.

இதற்கு இடையில் நாங்கள் அடிபட்டு விட்டோம். மதுரையில் மட்டுமல்ல.. தமிழகம் முழுவதும் தான் வாக்கு குறைந்துள்ளது. சிறுபான்மை மக்கள் இன்னும் எங்களை நம்பவில்லை. 

இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க