tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, ஜூலை 7–

பா.ஜ. தலைவர்அண்ணாமலை சுற்றி சுற்றி சூழ்ச்சி வலை விரிக்கிறார். இதில் அதிமுக தொண்டர்கள் சிக்க மாட்டார்கள் என்று முன்னாள்அமைச்சர்ஆர்.பி. உதயகுமார் கூறினார். அண்ணாமலை ஒரு அரைவேக்காடு, அவசரகுடுக்கை, கற்பனையை கொட்டி கனவுலகில்வாழ்கிறார். அண்ணாமலையை எதிர்த்து சிறை செல்லும்போராட்டம் நடத்துவோம் என்று முன்னாள் அமைச்சர்ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

 

மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காந்தி அருங்காட்சியகத்தில் நேற்று நடந்தது. நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் உதயகுமார் கூறியதாவது: 

  தமிழக அரசியலில் வெத்து விளம்பரம், வெளிச்சம் காட்டும் வகையில் அரசியல் அனுபவம் இல்லாமல், பொது வாழ்வில் அனுபவம் இல்லாமல் அவதூறு பரப்பி, அரசியல் பண்பு இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார். எடப்பாடியார் மீது அவதூறு பரப்பி அடிப்படை ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.

கனவுலகில்

தன்னை முன்னிலைப்படுத்த தேவையான அனுபவம் தகுதி வேண்டும். ஆனால், அண்ணாமலை அதை பெற்றுள்ளாரா ? எதுவும் இல்லை. கற்பனையை கொட்டி விட்டு கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவரின் பேச்சு தெளிவாக காட்டுகிறது. சாமானியரான எடப்பாடியார் உழைப்பால், கருணையால் 8 கோடி மக்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளார். இதை சகித்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அவதூறு கருத்துக்களை சிலர் பரப்பி வருகிறார்கள்.

ஜால வித்தை

அண்ணாமலை ஏற்கெனவே அரவக்குறிச்சியில் நின்று தோற்றுப் போனார். அதனை தொடர்ந்து கோவையில் கோடிகளை வாரி இறைத்து பல்வேறு வார்த்தை ஜால வித்தைகளை காண்பித்தார். மக்கள் அதை எல்லாம் நிராகரித்து விட்டனர். ஆனால் இன்றைக்கு, பாஜ வளர்ச்சி அடைந்து விட்டது என்று சொல்லி விவாதம் நடத்துகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமர், உள்துறை அமைச்சர் அதனை தொடர்ந்து நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 15 மூத்த அமைச்சர்கள் களத்தில் நின்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். அப்படி இருந்தும் அவர்களால் தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை. இதற்குக் காரணம், அண்ணாமலை போன்ற அவசரக்குடுக்கைகள் தான்.

 

அரை வேக்காடு

மத்தியில் கூட்டணி தயவால் தான் தற்பொழுது ஆட்சியைப் பிடித்துள்ளனர். அண்ணாமலை போன்ற அனுபவம் இல்லாதவர்கள் அரைவேக்கட்டுத்தனமாக அவதூறு பிரச்சாரம் செய்ததால் தமிழக மக்கள் மட்டுமின்றி இந்திய மக்களும் மாறுபட்ட தீர்ப்பைத் தந்துள்ளனர். 2019 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி வைத்தோம். அப்போது 19.39 சதவீத வாக்குகளைப் பெற்றோம். தற்பொழுது பாஜ கூட்டணி இல்லாமல் 20.46 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். தமிழகத்தில் பாரதப் பிரதமரை முன்னிலை படுத்தித் தான் வாக்குகள் விழுந்தன. அண்ணாமலைக்காக யாரும் ஒரு ஓட்டு கூட போடவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் ராமதாஸ், பாரிவேந்தர், டிடிவி, ஓபிஎஸ், ஜான்பாண்டியன் ஆகியோர் கூட்டணி வைத்தனர். இருந்தும்கூட வாக்கு குறைந்துள்ளது. 

கண்ணாடியில் முகம் பார்

எடப்பாடியார் அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறுகிறார். முதலில் அண்ணாமலை அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்கட்டும் அப்போதுதான் அவருக்குப் புரியும். பாஜவில் தற்போது கிரிமினல் பின்புலம் உள்ளவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். தற்போது அவர்களுக்கு எதிராக கைது, வழக்கு நடவடிக்கைகள் வருகிறது. பாஜ வில் உழைத்த மூத்தவர்கள் அனுபவசாலிகளை எல்லாம் திட்டமிட்டு அண்ணாமலை புறக்கணித்து வருகிறார்.

 முதலீடு போடாமல் லாபம் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். அதேபோல், இன்றைக்கு அண்ணாமலை எந்த முதலீடும் செய்யாமல், உழைப்பும் இல்லாமல், தியாகம் செய்யாமல் பலனை அறுவடை செய்ய நினைக்கிறார். அவருக்கு எப்போதும் ஏமாற்றம் தான் கிடைக்கும்.

அவதுாறு

அதிமுக மீது அவருக்கு ஏன் இத்தனை அக்கறை? அதிமுகவை புரட்சித்தலைவர் 17.10.1972 -ல் தொடங்கியபோது கொடியில் அண்ணா படத்தை பொறித்தார். அண்ணாவின் கொள்கையை கொண்ட அண்ணாயிசத்தை உருவாக்கினார். ஆனால், அண்ணாவைப் பற்றி அண்ணாமலை தவறாக பேசினார். அதேபோல் எட்டு கோடி மக்களின் தெய்வமான அம்மாவை பற்றி அவதூறாக பேசினார். அவரது இல்லத்தரசிக்கு ஒப்பிட்டு அம்மாவை பேசியதை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்படிப்பட்டவருடன் நாங்கள் எப்படி தொடர்ந்து பயணம் செய்ய முடியும்? ஆனால் அண்ணாமலை, எடப்பாடியாரை பாரதப் பிரதமருக்கு வலதுபுறத்தில் உட்கார வைத்தோம் என்று கூறுகிறார். இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் உட்கார வைத்துவிட்டு அதிமுக அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் வகையில் அண்ணாமலை அவதூறாகப் பேசினார்.

  இதே அண்ணாமலை தமிழகத்துக்கு என்ன செய்தார். தமிழகத்துக்கு நிதியைப் பெற்றுத் தந்தாரா? சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி கொண்டு வந்தாரா அண்ணாமலை? சென்னை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கடுமையான மழை பெய்த போது அதற்கு மழை நிவாரண நிதி பெற்று தந்தாரா? 

வாய் சவடால்

வாய்சவடால் பேசுவதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. இன்றைக்கு மேகேதாட்டுவில் அணைகட்ட முயற்சிக்கிறார்கள். முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட முயற்சிக்கிறார்கள். பாலாற்றின் குறுக்கே அணைகட்ட முயற்சி செய்கிறார்கள். இதற்கெல்லாம் மத்திய அரசு தற்போது வரை வாய் திறக்கவில்லை. காவிரியில் உரிய நீரை பெற்றுத் தர மத்திய அரசு வாய்திறக்கவில்லை. 

இதற்கெல்லாம் அண்ணாமலை என்ன செய்தார்? அண்ணாமலை பேராசைப்படுகிறார். அறிவுகெட்டத்தனமாக கேள்வி எழுப்புகிறார். கிராமத்தில் சொல்லுவார்கள் காய்த்த மரத்தில் தான் கல்லடி படும் என்று அதேபோல் எடப்பாடியார் மக்கள் சேவை செய்து காய்த்த மரமாக உள்ளார். அதனால் அவர் மீது பழிகளை சுமத்துகிறார்கள். அண்ணாமலை சுற்றிச் சுற்றி சூழ்ச்சி வலை விரிக்கிறார். அவர் விரிக்கும் வலையில் அதிமுக தொண்டர்கள் யாரும் சிக்க மாட்டார்கள்

சிம்ம சொப்பனம்

அதிமுகவை தமிழக மக்கள் கைவிடமாட்டார்கள். இன்றைக்கு அதிமுகவை எடப்பாடியார் காப்பாற்றி வருவதை சிலர் கபளீகரம் செய்ய முயற்கிறார்கள். அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடியார் உள்ளார். அண்ணாமலை எடப்பாடியாரை பற்றி பேசியதை எல்லாம் வாபஸ் பெறவேண்டும். இல்லை என்றால் அண்ணாமலைக்கு எதிராக சிறை செல்லும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்த அதிமுக தொண்டர்களாகிய நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க