tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

இந்த மண்ணில் எத்தனையோ மாபெரும் மனிதர்களும் மகானுபாவர்களும் தோன்றியிருக்கலாம் இருக்கலாம் மறைந்திருக்கலாம் ஆனால் சமுத்திர அலைகளால் கூட அழிக்க முடியாத அவர்களின் காலடித்தடங்கள் தான் இன்றைக்கும் நமக்கெல்லாம் வழிகாட்டும் பகவத் கீதையாக, திருக்குரானாக, பைபிளாக, திருக்குறளாக, வழிகாட்டி வருகிறது.

 

 

வாழ்க்கை என்னும் கப்பலில் பயணிப்பவர்களுக்கு அந்த மகத்தான மாமனிதர்களின் புனித நூல்கள் தான் இன்றைக்கும் நமக்காக வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட இந்த புனித மனிதர்களின் வரிசையில் தான் அண்மை நூற்றாண்டில் அவதார புருஷராக ஜனனித்தவர் சுவாமி விவேகானந்தர். உலக அரங்கில் அவர் வாழ்ந்தது என்னவோ வெறும் பத்தாண்டு காலம் என்றாலும் கூட, அவர் பேசாத எழுதாத துறைகளே இல்லை என்கிற அளவிற்கு ஆன்மீகமாக இருந்தாலும் அறிவியலாக இருந்தாலும், புவியியலாக இருந்தாலும், பூளோகமாக இருந்தாலும், சமூகவியலாக இருந்தாலும், சமதர்மமாக இருந்தாலும், மன இயலாக இருந்தாலும், மனையியலாக இருந்தாலும், கலையியலாக இருந்தாலும், கவிதைகளாக இருந்தாலும், இசையியலாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் அனைத்திற்கும் ஒரு தேஜஸை ஏற்படுத்தியவர் என்றால் மிகையல்ல.

 

 

சாத்த வழிபாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பகவான் ராமகிருஷ்ணர் அவர்களின் ஒப்பற்ற சீடர் தான் சுவாமி விவேகானந்தர். 1863 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 12ஆம் நாள் விஸ்வநாத தத்தாவிற்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாக நரேந்திர தத்தாவாக அவதாரம் செய்தவர் சுவாமி விவேகானந்தர். மேலை நாட்டு தத்துவங்களையும் ஐரோப்பிய வரலாறுகளையும் தன் கல்லூரி படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்தினார். இந்த நிலையில் தான் இறைவனைப் பற்றி பல சந்தேகங்களும் கேள்விகளும் அவரின் எண்ணத்தில் எழுந்தன. இறைவனுக்கு கீழே உள்ள நாம் அனைவரும் சமம் என்கிற போது ஏற்றத்தாழ்வுகள் ஏன் இருக்கிறது? கடவுள் இருப்பது உண்மைதானா? என்ற பல சந்தேகங்கள் அவருக்குள்ளே எழுந்தது. அனைத்தும் முரண்பாடுகளாக அவர் கண்ணுக்கு தெரிந்தது. பகுத்தறிவு வினாக்கள் அவர் உள்ளே எழுந்தது. இந்த நிலையில் தான் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை சந்தித்தார். அந்த புனித சந்திப்பிற்கு பின்னர் தான் கடவுள் இருப்பதை அறிந்தார். அது நமக்குள்ளே இருப்பதை உணர்ந்தார்.

 

 

அது மாத்திரமல்ல இந்துக்களினுடைய ஆன்மீகத்தையும், பௌத்தர்களுடைய கருணையும், கிறிஸ்தவர்களின் செயல் திறனையும், முகமதியர்களின் சகோதர மனப்பான்மையையும், ஒன்று கூட்டி உலகம் முழுமைக்கும் ஒரு புதிய பொதுவான மதத்தை உருவாக்க எண்ணினார். பத்து பதினைந்து பேர் சேர்ந்து கொண்டு இக்கருத்தை வலியுறுத்தி பொது இடங்களில் பேசினார். சிறுவர்களின் பேச்சை செவிமடுத்து கேட்க யாரும் இல்லை. கல்லால் அடித்தார்கள் காரி உமிழ்ந்தார்கள் சிலர் பரிகசித்தார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் பல காலம் பட்டினி கிடந்தார் பிச்சை எடுத்து உண்ண வேண்டிய சூழல். சில பிச்சை போடுவதை விடுத்து அடித்து துரத்தினார்கள். இந்த சூழலில் தான் இமயம் முதல் குமரி வரை தன் ஆன்மீக பயணத்தை தொடர்ந்தார். அப்படி நம் தமிழ்நாட்டில் காலடி பதித்தார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அல்லவா, மகான்களும் சித்தர்களும் அவதரித்த புண்ணிய பூமி அல்லவா, அவ்வாறு, ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் உதவியோடு அமெரிக்க தலைநகர் சிக்காகோவில் நடைபெற உள்ள சர்வ மகாசபை மாநாட்டிற்கு இந்தியாவின் சார்பில் சுவாமி விவேகானந்தரை பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.

 

 

லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் என்று பேசும் ஆங்கிலேயர்கள் மத்தியில் *சகோதர சகோதரிகளே* என்று பேசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். நான்காயிரம் பேர் அமர்ந்திருந்த அந்த அவை கைதட்டி மென்மேலும் அவரை உற்சாகமூட்டுகிறது அதுவரை இந்து மதம் என்ற ஒன்றை அறிந்திராத அவர்கள் சுவாமிஜியால் அறிந்து கொள்ள நேரிட்டது. அனைவரும் அதிசயத்து போனார்கள் நம் நாட்டினுடைய கலாச்சாரத்தை மேல்நாட்டு கலாச்சாரத்தோடு ஒப்பிட்டு பேசினார்.

 

 

எங்கள் நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆரியனாகத்தான் பிறப்பார்கள் என்றார். ஆரியன் என்றால் ஆரிய திராவிடர் என்ற நோக்கில் கூறவில்லை. *எங்கள் நாட்டு தாய்மார்கள் கர்ப்பவதியாக இருக்கும் போது, கடவுளே எனக்கு பிறக்கும் குழந்தை நல்லவனாக பிறக்க வேண்டும் என்றும், பிரசவத்தின் போது எனக்கோ என் பிள்ளைக்கோ எந்தவித தீங்கும் ஏற்படக்கூடாது என்றும் வேண்டிக் கொள்வார்கள். அது இந்துவாக இருந்தாலும் இஸ்லாமியராக இருந்தாலும் கிறிஸ்தவராக இருந்தாலும் அவரவர் கடவுளை வேண்டிக் கொள்வர். கடவுளிடம் வேண்டப்பட்டு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆரியன் தான்* என்றார். அது மாத்திரமல்ல, *எங்கள் நாட்டின் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் மத உணர்வு தான் தொடங்குவோம். காலையில் வீட்டை சுத்தம் செய்வது, நீரை பருகுவது, தூங்குவது, திருமணம் செய்வது, அவ்வளவு ஏன் திருடுவது கூட மத உணர்வோடு தான்* என்றார். அது மட்டுமல்ல, மதங்கள் பெருகட்டும் என்றார். ஏன் தெரியுமா மதநம்பிக்கை இருப்பவன் கட்டுப்பாடோடும் ஒழுக்கத்தோடும் அன்போடு இருப்பான் ஆகையால் தான் *நித்தம் நித்தம் மதங்கள் தோன்றட்டும்* என்றார்.

 

 

*பொங்குபல சமய மெனும் நதிகளெல்லாம்

புகுந்து கடந்திட நிறைவாய் பொங்கி

ஓங்கும் கங்கு கரை காணாத கடலே...... எங்கும் கண்ணாக காண்கின்ற கதியே...... அன்பர் தங்க நிழல் பரப்பிய மயற்சோடை எல்லாம் 

தணிக்கின்ற தருவே..... பூந்தடமே.......

ஞானச் செங்குமுதம் மலரவரும் மதியே...... எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே*

 

என்ற வள்ளலாரின் கூற்றுப்படி எத்தனை மதங்கள் சமயங்கள் தோன்றினாலும் அது ஒன்றாக கலக்கும் இடம் இறைவன் என்ற மாக்கடல் தான் ஆகவே மதங்கள் பெருகட்டும் என்றார்.

 

 

மகாபாரதத்தில்

சத்தியயுகத்தின் துவக்க காலத்தில் பிராமணர்கள் என்ற ஒரே சாதியினர் மட்டுமே இருந்தார்கள். பிராமணர்கள் என்றால் பிரம்மத்தை அறிந்தவர்கள். அந்த பிரம்மத்தை அறிந்த ரிஷிகளின் வழியிலே தான் நாமெல்லாம் வந்திருக்கிறோம். அந்த ரிஷிகள் பிற்காலத்தில், பல்வேறு தொழில்களை செய்ததன் காரணமாக பல்வேறு சாதிகளாக பிரிந்தார்கள். ஆக அனைவருமே பிராமணர்கள் தான் என்றும் அனைவரும் அவரவர் தாய்மொழியில் சமஸ்கிருதத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் உங்கள் அனைவரையும் பிராமணனாக மாற்றாமல் விடமாட்டேன் என்றும் இனி வரப்போகும் யுகத்தில் எல்லா சாதிகளும் மறைந்து பழையபடி முன்பிருந்த நிலைக்கு வரும் என்று கூறியவர் சுவாமி விவேகானந்தர்.

 

 

நம் பாரததேசம் அந்நியருக்கு அடிமைப்பட்டு கிடந்த நேரத்தில், அனைவருக்கும் சுதந்திர வேட்கையை கிளர்ந்தெழச் செய்தவர் சுவாமி விவேகானந்தர். *நமது பாரத நாட்டை வெறும் 4 கோடி ஆங்கிலேயர்கள் ஆள்வது எப்படி தெரியுமா? அவர்களின் ஒட்டுமொத்த குறிக்கோள் ஒன்றே. அவர்கள் ஒட்டுமொத்த எண்ணங்களும் ஒன்றே. ஆனால் நாம் இனத்தால் மதத்தால் பதவியால் பிளவு பட்டு கிடக்கிறோம். அதனால்தான் வெறும் 4 கோடி ஆங்கிலேயர்கள் முப்பது கோடி மக்களை ஆள முடிகிறது. நாம் பிரிவினையால்தான் அடிமைகளாக கிடக்கிறோம். இதற்கு அனைவரும் ஒன்றுபட்டால் தான் தீர்வு கிடைக்கும்* என்றார் சுவாமிஜி.

 

 

 மகாபாரதத்தில் வெறும் ஏழு அக்ரோணி சேனைகளைக் கொண்ட பாண்டவர்கள், 11 அக்ரோணி சேனைகளைக் கொண்ட கெளவரவர்களை வெல்லவில்லையா? எந்த ஒரு நாட்டிலும் அல்லது இயக்கத்தில் தொண்டர்களே இல்லாமல் அனைவரும் தலைவராக இருந்தால் அந்த நாடும் இயக்கமும் வீழ்ச்சியைதான் சந்திக்கும் இது வரலாற்று உண்மை அது மட்டும் அல்ல எதையும் எதிர்த்து போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

 

ஒருநாள் சுவாமிஜி காசி என்ற வாரணாசியில் கங்கை கரையோரம் நடந்து சென்று இருந்தார். அப்போது அவரை ஒரு குரங்கு ஒன்று துரத்தி வந்து கொண்டிருந்தது. சுவாமிஜி ஓடினார்... ஓடினார்... ஓடிக்கொண்டே இருந்தார், குரங்கு விடுவதாக இல்லை. அந்த வழியாக வந்த ஒரு முதியவர் ஓடாதே எதிர்த்து நில் என்றார். உடனே சுவாமிஜி எதிர்த்து நின்றார் அந்த குரங்கு வந்த வழியை திரும்பி சென்றது. அதனை தன் வாழ்நாளில் படிப்பினையாக ஏற்றுக் கொண்டு *எதையும் துணிந்து எதிர்த்து நில். அதனோடு போராடக் கற்றுக் கொள்.* என்றார். இதைத்தான் வள்ளுவன் *இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு இடும்பைப் படா தவர்* என்று துன்பத்தை எதிர்த்து நிற்பவர்களைக் கண்டு, துன்பமே துன்பப்பட்டு ஓடுமாம்.

 

 

ஒரு நாள் சுவாமிஜியை பார்ப்பதற்காக பசு பாதுகாப்பு இயக்கத்தில் இருந்து இருவர் வந்தார்கள். அவர்களிடம் சுவாமிஜி, உங்கள் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி கூறுங்கள் என்றார். வந்தவர்கள், வயதான பசுக்களை கசாப்புக் கடைகாரனிடமிருந்து மீட்டு அதற்கு தீனி போட்டு பாதுகாப்பது தான் எங்கள் சங்கத்தின் நோக்கம் என்றனர். *நல்லது... பாராட்டுகிறேன்.... சரி அண்மையில் வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான நம் சகோதர சகோதரிகள் பட்டினியால் மடிந்து போனார்களே அதற்கு உங்கள் சங்கத்தின் சார்பில் என்ன உதவினீர்கள்* என்று சுவாமிஜி கேட்டார். எங்கள் சங்கம் அதற்கெல்லாம் எதுவும் உதவவில்லை அவர்கள் பஞ்சத்தால் பட்டினியால் சாகவேண்டும் என்பது அவரவர்களின் கர்ம வினை பயன் என்றனர். இதை கேட்டு சுவாமிஜியினுடைய கண்கள் அக்னி ஜூவாலையைப் போல் சிவந்து போனது. கோபக்கனலோடு அவர்களிடம், *இது அவர்களின் கர்ம வினை பயன் என்றால், பசு கசாப்பு கடைக்காரரிடம் இருந்து சிக்குண்டு மடிவதும் கர்மவினை பயன் தானே.... ஆகவே பசுமை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லையே.... அதற்கு ஒரு இயக்கம் தேவையில்லை.... பசியால் பட்டினியால் துடிக்கும் எந்த ஒரு உயிருக்கும் ஒரு துண்டு ரொட்டி கூட கொடுக்காத எந்த மதத்தையும் நான் மதம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன்* என்றார். வந்தவர்கள் தன் தவறை திருத்திக் கொண்டு சுவாமிஜியிடமிருந்து விடை பெற்றுச் சென்றார்கள். மற்ற மனிதர்களுக்காக கிஞ்சித்தும் இரக்கம் காட்டாத இவர்களை மனிதர் என்று நினைக்கலாமா என்று உளம் புழுங்கினார்.

 

 

அனைத்து உயிர்களிடத்தும் இரக்கமும் அன்பும் கொண்டார். அது மாத்திரமல்ல அனைவரையும் அன்புடன் பழகுமாறு வலியுறுத்தினார். *பணத்தால் பெயரால் புகழால் கல்வியால் எந்த பயனும் இல்லை அன்பு இரக்கம் உன்னிடம் இருக்கிறது என்றால் கடவுளைத் தேடி காசிக்கு செல்ல வேண்டியது இல்லை, கங்கையிலே போய் முழுக வேண்டியது இல்லை, கோவில் கோவிலாக சுற்ற வேண்டிய நிர்பந்தம் இல்லை, பரிகாரங்கள் தேவையில்லை, உன்னை சுற்றி உள்ள ஏழைகளையும், துன்பப் படுபவர்களையும், பலகீனமானவர்களையும் கடவுளாக வழிபடுங்கள் அன்பின் மூலமாக கடவுளை தரிசியுங்கள், இதைத்தான் இயேசுபிரானும், முகமது நபி ஸல்லல்லாகும் அலைஹி வஸல்லாம் அவர்களும் புத்த பிரானும் இன்னும் பல ஆன்மீகப் பெரியவர்களும் செய்தார்கள். இன்றைக்கு நம் பார்வைக்கு தென்படுகிற மனிதன் மிருகங்களுள் நூற்றுக்கு 90 பேர் இறந்தவர்கள் ஆம் வெறும் பிணங்கள் தான். ஏனென்றால் அன்புடைவர்களை தவிர மற்றவர்கள் வாழ்பவர்கள் அல்ல* என்று வலியுறுத்தினார். இதைத்தான் வள்ளுவனும் 

*அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு* என்றான்.

 

 

 

அதுமாத்திரமல்ல, *பெண்மை எங்கு பூஜிக்கப்படுகிறதோ அங்கு முன்னேற்றம் இருக்கும்* என்று பெண்களை உயர்வுபடுத்தினார். *பழங்காலத்தில் பெண்கள் முனிவர்களாக வேத விற்பனர்களாக புலவர்களாக கவிஞர்களாக நாட்டுக்கு தலைவியாக எதிரிகளை எதிர்த்து துரத்தியவர்களாக கல்வியறிவில் சிறந்தவர்களாக விளங்கிய பெண்கள் ஏன் அடிமைப்பட்டு போனார்கள்* என்று 1894 இல் சுவாமிஜி அன்றைய பெண்களின் நிலையை தெரிவித்தார். ஆனால் அவர் கண்ட கனவு இன்றைக்கு பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் ஆளுமையை செலுத்தி வருகிறார்கள் என்கிற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இன்றைக்கு சின்னத்திரையின் மீது மோகம் கொண்டு அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் இந்த நிலை மாற வேண்டும். வளர்ச்சி பெற வேண்டும் அனைவராலும் பூஜிக்கப்பட வேண்டும்.

 

 

 

*தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று* என்ற வள்ளுவனின் வாக்கிற்கினங்க எட்டு எட்டாய் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு நான்காம் எட்டில் உலகம் முழுவதும் சென்று இந்து மதத்தினுடைய தத்துவத்தை பறைசாற்றி ஐந்தாம் எட்டில் தன்னுடைய வாழ்க்கையை புகழோடு முடித்துக் கொண்டவர் சுவாமி விவேகானந்தர். நம் இந்திய பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றி 1902 ஜூலை திங்கள் நான்காம் நாள் அவரது பூத உடலை இப்பூமியில் கழற்றி விட்டுவிட்டு ஒவ்வொரு இளைஞர்களுக்குள்ளும் உறைகின்ற ஆன்மாவாக இன்றும் நின்று நிலைத்து வாழுகிற சுவாமி விவேகானந்தரை இளைஞர்கள் உருவில் தரிசிப்போம். வீரமிக்க இளைஞர்களே.......! தேச முன்னேற்றம் என்னும் தேர்ச்சக்கரத்தை கிழப்புவதற்கு உங்களின் ஒவ்வொருவரின் தோளினை கொடுங்கள் என்று சுவாமிஜியின் கருத்தை வலியுறுத்தி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்

 

 

*திருக்குறள் இளம் புலமையர்*

கே.பி.ரோகித்கணேஷ் 

(சொற்பொழிவாளர், கட்டுரையாளர்)

 

உறையூர், திருச்சி -3

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க