tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 18–
சென்னை விமான நிலையத்திற்கு செல்போன் மூலம், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் இருவர் பிடிபட்டனர்.
சென்னை விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் பிற்பகல் ஒரு  டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, இன்னும் சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் என்று கூறி விட்டு, இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
பரபரப்பு
இதையடுத்து பரபரப்படைந்த சென்னை விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். மோப்ப நாய்களுடன் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், சென்னை விமான நிலையத்தில் உள்ள கழிவறைகள் மற்றும் உள்பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. 
அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய போலீசார் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த எண் சென்னை தாம்பரம் அருகே  சேலையூர் காவல் நிலைய பகுதியில் இருந்து வந்துள்ளதும், பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் சேர்ந்து இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்ததும் தெரிய வந்தது.
பிடிபட்டனர்
 சேலையூர் பகுதிக்கு விரைந்த போலீசார்  விசாரணை நடத்தி, குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவரையும், சேலையூர் அருகே அகரம் தென் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிளஸ்-1 மாணவரையும் பிடித்து, அவர்களிடமிருந்து மிரட்டல் விடுக்க பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர். பின்னர், மாணவர்கள் இருவரையும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது நடத்திய விசாரணையில், மாணவர்கள் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, "ஜாலியாக தெரியாமல் செய்து விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள்" என்று கெஞ்சினர். 
இதையடுத்து போலீசார் மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து, பின்பு மாணவர்களை கடுமையாக எச்சரித்ததோடு, அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளனர். அதன் பின்பு மாணவர்கள் இருவரிடமும் மன்னிப்பு கடிதங்கள் எழுதி வாங்கிக்கொண்டு, அவர்களின் பெற்றோர்களுடன் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க