tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே 9

சென்னையில் மே 11, 12 ந்தேதிகளில் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து, சென்னையில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தில், ரஷ்ய கல்விக் கண்காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் அவ்தீவ் ஓலெக், ரஷ்ய கலாச்சார மையத்தின் இயக்குநரும், துணைத் தூதருமான அலெக்ஸாண்டர் டோடோநவ், ரஷ்யாவில் மருத்துவக் கல்வி ஆலோசகர் ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் (Study Abroad Educational Consultants) நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சி. ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 60 ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள். “இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commission) மாறிவரும் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே கடைப்பிடித்து வருவதால், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை நாடும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவே முதன்மையான தேர்வாக இருக்கிறது. 2024-25ஆம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 8000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்க உள்ளன. இது கடந்த ஆண்டு 5000 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

50 சதவீத மதிப்பெண்கள் போதும்

தேசிய தகுதி - நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற்ற, 12-ஆம் வகுப்பில் முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்ற இந்திய மாணவர்கள் (எஸ்.சி./எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% மட்டுமே), ரஷ்யா மருத்துவத்தில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் படித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ். / பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி. (CET), ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற முன் தகுதித் தேர்வுகள் தேவை இல்லை” என்று தெரிவித்தனர்.

இந்த மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன், மே 11, 12 ஆகிய தேதிகளில், சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தில் நடைபெறும். மேலும் இந்தக் கண்காட்சி மே 14-ஆம் தேதி மதுரை ரெசிடென்சி ஓட்டலிலும்; மே 15-ஆம் தேதி திருச்சி ஃபெமினா ஓட்டலிலும்; மே 16-ஆம் தேதி சேலம் ஜி.ஆர்.டி. ஸைப் ஓட்டலிலும், மே 17-ஆம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜெண்டிலும் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. தகுதியுள்ள மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் வழங்கப்படும்.

கடந்த காலங்களைப் போலவே, ரஷ்ய அரசாங்கத்தின் வருடாந்திர உதவித்தொகை திட்டம் வழியாக இந்த ஆண்டும் 200 இந்திய மாணவர்களுக்கு 100 சதவீதம் வழங்கப்படும். இதன் மூலம் ரஷ்யாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, பட்ட மேற்படிப்புத் திட்டங்களை இலவசமாக அவர்கள் படிக்க முடியும். எம்.பி.பி.எஸ். படிப்பதற்கான கல்விக் கட்டணம், ஆண்டொன்றுக்கு மிகக் குறைவாக ரூ. 3 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. ரஷ்யாவில் உயர் கல்விக்கான செலவு ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் ரஷ்யக் கூட்டமைப்பு அரசாங்கத்தால் கல்விக்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது.

இந்திய மாணவர்கள் 25,000

“ரஷ்யா முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் 200 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,00,000-க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்களிடையே மருத்துவம் மிகவும் பிரபலமான படிப்பாக உள்ளது. தற்போது, 30 ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் சுமார் 25,000 இந்திய மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணையான அந்நாட்டு எம்.டி. படிப்பை அனைத்து ரஷ்யப் பல்கலைக்கழகங்களும் வழங்கி வருகின்றன.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள இக்கல்விக் கண்காட்சியில், வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் (Volgograd State Medical University), இம்மானுவேல் காண்ட் பால்டிக் ஃபெடரல் பல்கலைக்கழகம் (Immanuel Kant Baltic Federal University), கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் (Kazan State Medical University), தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழகம் (National Research Nuclear University MEPhI), குர்ஸ்க் ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகம் (Kursk State Medical University), மாஸ்கோ விமானப் போக்குவரத்து கல்வி நிறுவனம் (Moscow Aviation Institute), மாஸ்கோ ஸ்டேட் பிராந்திய பல்கலைக்கழகம் (Moscow State Regional University) உள்ளிட்டவை பங்கேற்க உள்ளன என தெரிவித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழக பொது நோயியல் துறையின் இணைப் பேராசிரியர் தைமூர் ருஸ்தமோவிச் அக்மதேவ் (Mr. Timur Rustemovich Akhmetov), தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழக பயோ டெக்னாலஜி பேராசிரியர் எலினா சரபுல்ட்சேவா (Ms. Elena Sarapultseva), ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சிகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9282 221 221.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க