tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக்.3 –

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதேஸ்மார்ட் போன் மூலம் பிரசாரத்தை துவங்கவேண்டும். செல்போன் தான் நமக்கு மேடை என்று அதிமுகவினருக்கு பழனிசாமி ஆலோசனை கூறினார்.

 

  அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐடி விங்) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 

அப்போது பழனிசாமி பேசியது:

  2014 மக்களவை தேர்தலில் அதிமுகவின் மகத்தான வெற்றிக்கு தகவல் தொழில்நுட்ப பிரச்சாரம் மிக முக்கிய பங்கு வகித்தது. அன்று தகவல் தொழில்நுட்ப பிரச்சாரத்தில் அதிமுகதான் நம்பர் 1. இன்று நாம் சற்று பின்தங்கியுள்ளோம். அதை சரி செய்ய வேண்டும். அதிமுகவுக்கு எதிராக சிலர் தொடர்ந்து திட்டமிட்டு பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றனர். அதை அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுதான் முறியடிக்க வேண்டும். அந்த சக்தி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளிடம்தான் உள்ளது.

செல்போன் பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுதான் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். ஃபேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எல்லா சமூக வலைதளங்களிலும் அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் வலுவாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு அவலங்களை மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று தோலுரித்து காட்டும் சக்தி ஸ்மார்ட் போன்களுக்கு இருக்கிறது. இன்று ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களே இல்லை. இதுதான் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்கான முதல் யுத்தி. மேலும் உள்ளூர் பிரச்னைகளை காணொளி மூலம் தொடர்ந்து வெளியிடுங்கள். செல்போன்தான் நமக்கு மேடை, மக்கள் பிரச்னை, சமூக பிரச்னையை கண்ணியத்துடன் பதிவு செய்யுங்கள். யாருக்கும் அஞ்ச வேண்டாம். தலைமை, பக்க பலமாக இருக்கும்.

தோல்வியை ஒப்புதல்

ஜெயலலிதா இருந்த வரை வெற்றியை மட்டுமே பார்த்த அதிமுக, அவரது மறைவைத் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறோம். வெற்றி, தோல்வி அரசியலில் சகஜம்தான். இருந்தாலும் கடந்த தேர்தல்களில் அதிமுகவின் நிலையான ஓட்டு வங்கியில் 10 சதவீதத்தை இழந்துள்ளோம். அந்த 10 சதவீத ஓட்டுகளை மீட்க வேண்டிய நெருக்கடி நமக்கு ஏற்பட்டுள்ளது. அதை மீட்டுவிட்டால் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. 

இவ்வாறுஅவர் பேசினார்.

மாயத் தோற்றம்

கூட்டத்தில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசுகையில், ‘‘தமிழகத்தில் பாஜ வளர்ந்துவிட்டதாக, ஒரு மாய தோற்றத்தை அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பரப்பி வருகிறது. வெறும் 10 பேர் மட்டும் அமர்ந்து மத்திய அரசு வழங்கும் தகவல்களை வைத்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் செயலாற்றி வருகின்றனர். மேடை பேச்சு, 100 பேரை மட்டுமே சென்றடைகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் வெளியிடும் செய்தி 2 வினாடிகளில் லட்சக்கணக்கான மக்களை சென்றடைகிறது. அந்த வேலையைத்தான் பாஜ செய்து வருகிறது. அதை அதிமுக கையில் எடுக்க வேண்டும் என்றார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க